News November 21, 2024

தமிழ்நாடா? கொலை நாடா? பொங்கிய பிரேமலதா

image

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக பிரேமலதா தெரிவித்துள்ளார். ஆசிரியர், வழக்கறிஞர், மருத்துவர் என யாருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாக கூறிய அவர், இது தமிழ்நாடா அல்லது கொலை நாடா என்ற கேள்வி மக்களிடம் எழுந்துள்ளதாகவும் தெரிவித்தார். முன்னதாக, தஞ்சாவூரில் பள்ளி ஆசிரியை நேற்று கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். ஓசூரில் வழக்கறிஞர் பட்டப்பகலில் வெட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Similar News

News December 11, 2025

விஜய் இன்று முக்கிய ஆலோசனை

image

பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் விஜய் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். மாநில, மாவட்ட அளவிலான நிர்வாகிகள் இதில் கலந்து கொள்ள உள்ளனர். பூத் கமிட்டி, நிர்வாகிகள் நியமனம் உள்ளிட்ட பணிகள் முழுமை அடையாததால், பல மா.செ.,க்கள் மீது விஜய் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. அதனால், தேர்தலுக்கு முன்னதாக மா.செ.,க்களை ஒழுங்குப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.

News December 11, 2025

இன்றே கடைசி.. உடனே செக் பண்ணுங்க

image

SIR படிவத்தை சமர்ப்பிக்க இன்றே கடைசி நாளாகும். உடனே உங்கள் பகுதியின் BLO-வை அணுகி, படிவத்தை பூர்த்தி செய்து அவரிடம் சமர்ப்பியுங்கள். தமிழ்நாட்டில் இதுவரை 6.36 கோடி வாக்காளர்களின் படிவங்கள் பதிவேற்றப்பட்டுள்ளன. உங்கள் படிவம் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டு விட்டதா என அறிய <>இங்கே<<>> கிளிக் செய்யவும். SIR பணிகளை தொடர்ந்து, 16-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.

News December 11, 2025

உண்ணி காய்ச்சல் முதலில் இப்படி தான் தெரியும்

image

<<18527368>>உண்ணி காய்ச்சல்<<>> ஏற்பட்டால், பூச்சி கடித்த இடத்தில் சிவப்பு சிவப்பாக சிறிய தடிப்பு ஏற்படும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தலைவலி, காய்ச்சல் இருக்கும். ஆரம்பத்தில் கண்டறியாமல் விட்டால், பூச்சி கடித்த இடத்தில் ரத்தக்கட்டு ஏற்பட்டு, உள்ளுறுப்புகள் செயலிழந்து கோமா, மரணம் கூட ஏற்படக்கூடும். எனவே காய்ச்சல் மற்றும் தடிப்புகள் ஏற்பட்டால் அலட்சியம் காட்ட வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!