News August 7, 2025
தமிழ்ச்செம்மல் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

தமிழ் வளர்ச்சி துறை மூலம் தமிழ் செம்மல் விருது வழங்கப்படுகிறது. விருது பெறுபவர்களுக்கு ரூ.25 ஆயிரம் பரிசுத்தொகை, தகுதியுரையும் வழங்கப்படுகிறது. செங்கை மாவட்டத்தில் 2025ம் ஆண்டிற்கான விருதுக்கு தமிழ் ஆர்வலர்கள் விண்ணப்பம் அளிக்க www.tamilvalarchithurai.tn.gov.in என்ற இணையத்தில் பதிவிறக்கம் செய்து உரிய விவரங்களுடன் காஞ்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 7, 2025
சுதந்திர தினத்தை ஒட்டி சிறப்பு ரயில் இயக்கம்

வருகிற 17-ந்தேதி நாகர்கோவில் – தாம்பரம் இடையே அதிவிரைவு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அன்று இரவு 11.15 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்படும் சிறப்பு ரெயில் (06012) மறுநாள் காலை 10.55 மணிக்கு தாம்பரம் சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுமார்க்கமாக 18-ந்தேதி மதியம் 3.30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரெயில் (06011) மறுநாள் அதிகாலை 5.15 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.
News August 7, 2025
சென்னைக்கு சிறப்பு சேர்க்கும் செங்கல்பட்டு

கார் உற்பத்தி அதிகம் என்பதாலே ஆசியாவின் டெட்ராய்டு என்ற பெயர் சென்னைக்கு உண்டு. சென்னையின் இந்த பெருமைக்கு செங்கல்பட்டும் காரணம் . ஆட்டோ மொபைல் துறையில் சென்னையின் புறநகர் பகுதியான செங்கல்பட்டு முக்கிய பங்கு வகிக்கிறது. மறைமலை நகரில் Ford Motors, Hyundai, Rane போன்ற முன்னனி கார் தயாரிப்பு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. *சென்னைக்கே பெருமை சேர்க்கும் நம்ம மாவட்ட பெருமையை ஷேர் பண்ணுங்க*
News August 7, 2025
செங்கல்பட்டு மக்களே சான்றிதழ் தொலைந்துவிட்டதா?

செங்கல்பட்டு மக்களே, வருவாய்துறையின் கீழ் பெறப்படும் சாதி சான்றிதழ், பிறப்பு/இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் தொலைந்துவிட்டால் தாசில்தார் அலுவலகத்துக்கு செல்ல வேண்டாம். நீங்கள் வீட்டில் இருந்தபடியே உங்கள் செல்போனில் டவுன்லோடு செய்து கொள்ளலாம். <