News March 12, 2025
தமிழில் பெயர் பலகை இல்லாத கடைகள் மீது நடவடிக்கை

சென்னையில், தமிழில் பெயர் பலகை இல்லாத கடைகளின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ய மாநகராட்சி முடிவு செய்துள்ளது. சென்னை மாநகராட்சியில், 20,000 கடைகள் உரிமம் பெற்று செயல்பட்டு வருகிறது. இவற்றில், பாரிமுனை, சௌகார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் தமிழில் பெயர் பலகை இல்லாமல் இருப்பது குறித்து புகார்கள் வந்துள்ளன. இந்த கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்பி சரி செய்ய மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
Similar News
News April 7, 2026
சென்னையில் மீண்டும் மீண்டும் விஜய்யின் பரப்புரை ரத்து!

2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறார். இந்த நிலையில், தவெக தலைவர் விஜய் சைதாப்பேட்டை தொகுதியில் பரப்புரை மேற்கொள்ள திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. பரப்புரைக்கு போலீசார் அனுமதி கொடுத்தாலும் நேர கட்டுப்பாட்டால் பரப்புரை ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
News April 7, 2026
சென்னை: தண்ணீர் குடித்த சிறுமி துடிதுடித்து பலி

திருவல்லிக்கேணியை சேர்ந்தவர் சோனியா. இவருக்கு திருமணமாகி லாவண்யா(6), சம்யுக்தா(3) என, 2 பெண் குழந்தைகள் உள்ளனர். வீட்டில் லாவண்யா தண்ணீர் குடித்தபோது, திடீரென மூச்சுத்திணறி மயங்கி விழுந்தார். பெற்றோர், சிறுமியை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு, பரிசோதனை செய்த மருத்துவர்கள், வழியிலேயே சிறுமி உயிரிழந்ததாக தெரிவித்தனர். இது குறித்து அண்ணா சதுக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.
News April 7, 2026
பெரம்பூர் தொகுதியில் 3 விஜய் போட்டி!

சட்டமன்றத் தேர்தலில் வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது. அதில் த.வெ.க. தலைவர் விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில், மொத்தம் 63 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். அதில் G.விஜய் என்ற பெயரில் ஒருவரும், K.விஜய் என்ற பெயரில் ஒருவரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இது ஓட்டுப்பதிவின் போது குழப்பம் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து நீங்க நினைப்பதை கமெண்ட் பண்ணுங்க.


