News April 10, 2025

தமிழில் பெயர்கள் வைக்காத கடைகள் மீது நடவடிக்கை

image

தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகள், வணிக, உணவு, தொழில் நிறுவனங்களின் பெயர் பலகையானது தமிழில் இருக்க வேண்டும். பிற மொழியும் தேவைப்படும் பட்சத்தில் தமிழில் முதன்மையாகவும். பெரியதாகவும், போதிய இடைவெளியுடன் மற்ற மொழிகளை விட பார்வைக்கு மேலோங்கியும் இருக்க வேண்டும். ஆங்கிலத்தில் இரண்டாவதாகவும், பிற மொழிகளில் அடுத்ததாகவும் இடம் பெற வேண்டும். இல்லையேல் நடவடிக்கை எடுக்கப்படும் கலெக்டர் கமல் கிஷோர்.

Similar News

News September 28, 2025

தென்காசி: கிராம வங்கியில் வேலை! இன்றே கடைசி

image

தென்காசி மக்களே, தமிழ்நாடு கிராம வங்கிகளில் ஆபிசர் பணிகளுக்கு 489 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டன. 18 – 40 வயதுக்கு உட்பட்ட டிகிரி முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். செப். 28க்குள் (இன்று) இங்கு <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்க வேண்டும். நவம்பர் மாதத்தில் தேர்வு நடைபெறும். சம்பளம் (Approx) ரூ.48,000 – ரூ.1,00,000 வரை. டிகிரி முடித்தவர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க.

News September 28, 2025

தென்காசியில் ரூ.69.49 கோடி ஒதுக்கீடு

image

தென்காசி நகராட்சிக்குள்பட்ட பகுதியில் குடிநீர் அபிவிருத்தித் திட்டப் பணிகள் மேற்கொள்ள ரூ.69.45 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தென்காசி நகர்மன்ற தலைவர் சாதிர் தலைமை வகித்த அவசர கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தண்ணீர் விடும் சமயங்களில் பெரும்பாலான வீடுகளில் மோட்டார் மூலம் நீர் பிடிப்பதால் தட்டுப்பாடு நிலவுவதாக சாதிர் கூறினார்.

News September 28, 2025

தென்காசி மாவட்ட இரவு ரோந்து பணி காவலர்கள்

image

தென்காசி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இரவு நேரங்களில் காவல் துறை உதவி தேவைப்பட்டால் பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. இன்று (27-09-25) தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விபரம். அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் -9884042100 ஐ தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!