News January 26, 2026

தமிழறிஞர் தெ.ஞானசுந்தரம் காலமானார்.. கண்ணீர் அஞ்சலி

image

<<18961392>>தமிழறிஞர் தெ.ஞானசுந்தரம்<<>> மறைவுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு இரங்கல் தெரிவித்துள்ளார். மூத்த தமிழறிஞரும், செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் Ex துணை தலைவருமான தெ.ஞானசுந்தரம் மறைந்த செய்தியறிந்து வருத்தமுற்றதாக அவர் தெரிவித்துள்ளார். இலக்கிய ஆய்வாளர், சொற்பொழிவாளர், பேராசிரியர் என பன்முக ஆளுமை கொண்ட அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு இரங்கலைத் தெரிவிப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News February 4, 2026

திமுகவுக்கு ஜனநாயகம் பற்றி பேச தகுதியில்லை: வானதி

image

சட்டமன்ற ஜனநாயகத்தை காலில் போட்டு மிதித்த திமுகவுக்கு நாடாளுமன்ற ஜனநாயகம் பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது என வானதி கேள்வி எழுப்பியுள்ளார். பேரவையில் எதிர்க்கட்சிகள் பேசத் துவங்கினாலே சபாநாயகர் அப்பாவு குறுக்கிட்டு அனைத்தையும் நீக்குகிறார் என்று விமர்சித்த அவர், வெளிவராத புத்தகத்தில் இருப்பதாக கூறி தேச பாதுகாப்பு தொடர்பாக தவறான தகவல்களை அவையில் பேச எப்படி அனுமதிப்பது என கேள்வி எழுப்பினார்.

News February 4, 2026

$852 பில்லியனுடன் வரலாறு படைத்த எலான் மஸ்க்

image

SpaceX – xAI இணைப்புக்கு பிறகு எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு $852 பில்லியனை (₹77.08 லட்சம் கோடி) எட்டியுள்ளது. இதன்மூலம் உலக வரலாற்றிலேயே பெரும் செல்வந்தராக அவர் உருவெடுத்துள்ளார். இணைப்பிற்கு பிறகு உருவான SpaceX – xAI நிறுவனத்தின் மதிப்பு $1.25 டிரில்லியனாக உள்ள நிலையில், இது மஸ்க்கின் சொத்து மதிப்பில் கூடுதலாக $84 பில்லியனை சேர்த்துள்ளது. லாரி பேஜ் $278 பில்லியனுடன் 2-ம் இடத்தில் உள்ளார்.

News February 4, 2026

இந்தியாவுக்கு 311 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆப்கன்

image

U-19 WC தொடரில் இந்தியாவுக்கு எதிரான 2-வது அரையிறுதி போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கன் 310 ரன்கள் குவித்துள்ளது. தொடக்க வீரர்கள் அடுத்தடுத்து அவுட்டான நிலையில், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களான பைசல் ஷினோசாடா , உசைருல்லாஹ் நியாசாய் சதம் விளாசி அசத்தினர். இதனால், அந்த அணி 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 310 ரன்கள் குவித்தது. IND-வின் தீபேஷ் தேவேந்திரன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

error: Content is protected !!