News October 24, 2024
தமிழரின் தொன்மை நாகரீகம் என்ற தலைப்பில் ஓவியப் போட்டி

செங்கல்பட்டில் மாணவர்களின் தனித்திறனை வெளிக்கொணரும் வகையில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 9ஆம் வகுப்பு பயிலும் 62 மாணவ, மாணவிகள் “சிறகை விரிக்கலாம் வாருங்கள்–100” என்ற நிகழ்ச்சியில், தமிழரின் தொன்மை நாகரீகம் என்ற தலைப்பில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு ரொக்க பரிசும், பாராட்டு சான்றிதழ்களையும், சார் ஆட்சியர் வெ.நாராயண சர்மா இன்று (24.10.2024) வழங்கி பாராட்டினார்.
Similar News
News December 19, 2025
செங்கல்பட்டு: Diploma/ ITI முடித்திருந்தால் 1லட்சம் வரை சம்பளம்

மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (DRDO) காலியாக உள்ள 764 Senior Technical Assistant மற்றும் Technician பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. டிப்ளமோ, பட்டப்படிப்பு மற்றும் ITI முடித்திருந்தது 18 முதல் 28 வயது உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.1,12,400 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ஜன-01 குள் இந்த <
News December 19, 2025
செங்கல்பட்டு: 510 கிலோ கஞ்சா அழிப்பு!

ஆவடி போலீஸ் கமிஷனரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பறிமுதல் செய்யப்பட்ட 510 கிலோ கஞ்சா, நீதிமன்ற உத்தரவுப்படி செங்கல்பட்டு மாவட்டம் தென்மேல்பாக்கத்தில் உள்ள தனியார் ஆலை இயந்திரத்தில் கொட்டி அழிக்கப்பட்டது. கூடுதல் கமிஷனர் பவானீஸ்வரி முன்னிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த ஆண்டில் இதுவரை ரூ.3 கோடி மதிப்பிலான 2,892 கிலோ கஞ்சா எரிக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
News December 19, 2025
செங்கல்பட்டு: வேலை செய்த வீட்டில் பெண் கைவரிசை!

தாம்பரம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த சுகுமார் (71) என்பவரது வீட்டில், திருவள்ளூரைச் சேர்ந்த லட்சுமி (50) என்பவர் சமையல் வேலைக்குச் சேர்ந்தார். ஒரு மாதத்திலேயே அவர் திடீரென வேலைக்கு வராமல் தலைமறைவானார். சந்தேகமடைந்த சுகுமார் பீரோவைச் சோதித்தபோது, அதிலிருந்த நகை மற்றும் பணம் திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்து தாம்பரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


