News February 9, 2026

தமிழன் மலேசியாவில் ஒன்னு, ஒடிசாவில் ஒன்னா? ரகுபதி

image

மலேசியாவில் தமிழர்களை புகழ்ந்து பேசும் PM மோடி, ஒடிசாவுக்கு சென்றால் தமிழர்களை திருடன் என பேசுவது ஏன் என அமைச்சர் ரகுபதி சாடியுள்ளார். PM மோடி தனது மலேசிய பயணத்தின்போது <<19077367>>தமிழ், தமிழர்களின் பண்பாடு சிறந்தது<<>> என புகழாரம் சூட்டியிருந்தார். அது குறித்து பேசிய அமைச்சர் ரகுபதி, இது முற்றிலும் நாடகம் எனவும், பாஜகவின் நாடகத்தை தமிழக முருக பக்தர்கள் அறிவார்கள் என்றும் கூறியுள்ளார். உங்கள் கருத்து என்ன?

Similar News

News February 19, 2026

இதய நோய்க்கு NO சொல்லும் உணவுகள்!

image

நமது உணவு கலாச்சாரம் முற்றிலுமாக மாறிப்போனதால் இதய நோய்கள் இளம் வயதிலேயே பலருக்கு வருகிறது. உணவு பழக்க வழக்கம் மூலமாகத்தான் இந்த ஆபத்தில் இருந்து நம்மால் தப்ப முடியும் என நிபுணர்கள் கூறுகின்றனர். அதனால், இதய நோய் ஆபத்தை தடுக்க நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய முக்கிய பொருள்கள் என்ன என்பதை மேலே போட்டோஸாக கொடுத்துள்ளோம். போட்டோஸை SWIPE செய்து பாருங்கள். SHATE IT..

News February 19, 2026

கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தாது: ரஷ்யா

image

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதற்கு இந்தியா ஒப்புக்கொண்டதாக US கூறியிருந்தது. ஆனால், இதை ரஷ்யா முழுவதுமாக மறுத்துள்ளது. இந்தியா எண்ணெய் கொள்முதல் கொள்கையை மாற்றவில்லை என்றும், ரஷ்ய எண்ணெயை வாங்குவது இரு நாடுகளுக்கும் பலன் அளிப்பதோடு உலகளாவிய எரிசக்தி சந்தையை சீராக இருக்க உதவுதாகவும் அந்நாட்டு தெரிவித்துள்ளது. ஆனால் இந்தியா அதிகாரப்பூர்வமாக இதுவரை எந்த கருத்தும் சொல்லவில்லை.

News February 19, 2026

MS தோனி பொன்மொழிகள்

image

*முடிவை விட செயல்முறை தான் முக்கியமானது. நீங்கள் சரியான பாதையில் சென்றால், முடிவு தானாகவே தேடி வரும். *தோல்விகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளுங்கள், ஆனால் அந்தத் தோல்வியையே சுமந்துகொண்டு திரியாதீர்கள்.*வெற்றி என்பது தற்காலிகமானது, ஆனால் நீங்கள் வாழ்க்கையை அணுகும் விதம் எப்போதும் நிலைத்து நிற்கும். *அமைதியாக இருப்பது பலவீனம் அல்ல, அது மிகப்பெரிய பலம். பதற்றமான சூழலில் நிதானமே வெற்றிக்கான வழி.

error: Content is protected !!