News January 6, 2026
தமிழக வீராங்கனைக்கு 8 ஆண்டுகள் தடை

தமிழக தடகள வீராங்கனை தனலட்சுமி சேகர் மீண்டும் ஊக்க மருந்து சர்ச்சையில் சிக்கியுள்ளார். 2022-ல் ஊக்க மருந்து சோதனையில் சிக்கியதால் 3 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. கடந்த ஆகஸ்ட்டில், களம் திரும்பிய அவர் மீண்டும் ஊக்கமருந்து சோதனையில் சிக்கினார். இதனால், அவருக்கு தேசிய ஊக்க மருந்து எதிர்ப்பு நிறுவனம் 8 ஆண்டுகள் தடை விதித்துள்ளது. இவர் 2021-ல் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்றவர் ஆவார்.
Similar News
News February 5, 2026
எந்த நீரில் தலைக்கு குளிப்பது நல்லது?

தலைக்கு குளிக்கையில் நாம் பயன்படுத்தும் நீரும் முடி உதிர்வுக்கான காரணமாக அமைகிறது. அந்தவகையில் வெந்நீரில் தலைக்கு குளித்தால் கூந்தல் வறட்சியடையும், ஈரப்பதம் உறிஞ்சப்படும், அதிகப்படியான எண்ணெய் உற்பத்தியை ஏற்படுத்தக்கூடும். அதுவே, குளிர்ந்த நீரில் குளித்தால் முடியின் ஈரப்பதம் தக்கவைக்கப்படும், கூந்தல் ஆரோக்கியம் மேம்படும், தலைமுடி பளபளக்கும், முடி உதிர்வு தடுக்கப்படும். SHARE IT
News February 5, 2026
பிப்ரவரி 5: வரலாற்றில் இன்று

*1971–அப்பல்லோ 14 விண்கலம் நிலவில் தரையிறங்கியது *1976–நடிகர் அபிஷேக் பச்சன் பிறந்தநாள் *1985–கிறிஸ்டியானோ ரொனால்டோ பிறந்தநாள் *1992–நெய்மார் பிறந்தநாள் *2000–இசையமைப்பாளர் டி.ஜி.லிங்கப்பா நினைவு நாள் *2023–நடிகர் டி.பி.கஜேந்திரன் நினைவு நாள்
News February 5, 2026
ஈரான், US அணுசக்தி ஒப்பந்தம்.. தேதி குறிச்சாச்சு!

ஈரான், US இடையிலான அணுசக்தி ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகவுள்ளது. இதுபற்றிய பேச்சுவார்த்தை ஓமனின் மஸ்கட் நகரில் வரும் நாளை நடைபெறும் என ஈரானின் வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார். முன்னதாக, அணுசக்தி ஒப்பந்தத்திற்கு உடன்படாவிட்டால் ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படும் என டிரம்ப் எச்சரித்திருந்தார். இதை சுப்ரீம் லீடர் கொமேனி எதிர்த்த நிலையில், அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.


