News December 10, 2025

தமிழக பொறுப்பு டிஜிபிக்கு ஆஞ்சியோ சிகிச்சை

image

தமிழக பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமனுக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து, சென்னை அப்போலோ ஹாஸ்பிடலில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது வெங்கட்ராமன் நலமுடன் இருப்பதாகவும், அவரது உடல்நிலையை டாக்டர்கள் குழுவினர் தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் ஹாஸ்பிடல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News December 10, 2025

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் பைக்குகள்

image

இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம், 2025-ல் அதிகம் விற்பனையாகும் பைக்குகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், டாப் 10-ல் எந்தெந்த பைக்குகள் இடம்பிடித்துள்ளன என்பதை, வரிசைப்படி மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில், உங்களுக்கு மிகவும் பிடித்த பைக் எது? கமெண்ட்ல சொல்லுங்க. SHARE.

News December 10, 2025

அதிருப்தியில் இருக்கிறாரா அதிமுக EX அமைச்சர்?

image

செங்கோட்டையனை தொடர்ந்து அதிமுக EX அமைச்சர் <<18519607>>மாஃபா பாண்டியராஜனும்<<>> TVK-ல் இணையவுள்ளதாக செய்திகள் வெளியாகின. ஆனால் ADMK பொதுக்குழுவில், 13-வது தீர்மானம் வாசிக்கப்பட்ட போது அதை முன்வைத்தவர்களில், மாஃபாவின் பெயரையும் சிவி சண்முகம் குறிப்பிட்டார். ஒருவேளை மாஃபா அதிருப்தியில் இருந்தால் அவரது பெயர் இடம்பெற்றிருக்காது. எனவே, அவர் தவெகவில் இணைய வாய்ப்பில்லை என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

News December 10, 2025

வங்கிக் கணக்கில் பணம்.. பிரதமர் மோடி அறிவித்தார்

image

இந்திய வங்கிகளில் உள்ள ₹78,000 கோடி உரிமை கோரப்படாத பணத்தை கஸ்டமர் (அ) குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக PM மோடி அறிவித்துள்ளார். ‘Your Money, Your Right’ திட்டத்தில் ₹2,000 கோடி உரியவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. வங்கிகளில் உள்ள பணத்தை எடுக்க <>UDGAM<<>>, இன்சூரன்ஸ்களில் உள்ள பணத்தை எடுக்க Bima Bharosa, மியூச்சுவல் ஃபண்ட் பணத்தை எடுக்க MITRA இணையதளங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

error: Content is protected !!