News March 13, 2026
தமிழக தேர்தல் தேதி.. சற்றுமுன் வெளியான தகவல்

வரும் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 15) தமிழகத்திற்கான தேர்தல் தேதியை ECI அறிவிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. மார்ச் 14-ல், கொல்கத்தாவில் நடைபெறும் பாஜகவின் ‘பரிவர்த்தன் யாத்திரையின்’ நிறைவு பொதுக்கூட்டத்தில் PM மோடி பேசுகிறார். இதன்பிறகே தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. ஏப்ரல் 2-வது (அ) 3-வது வாரத்தில் ஒரே கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெறும் என்றும் ECI வட்டாரங்கள் கூறுகின்றன.
Similar News
News March 30, 2026
மீண்டும் ஒன்றாக இணைவதாக அன்புமணி அறிவிப்பு

புதுச்சேரியில் தனித்து போட்டியிடும் முடிவை பாமக திரும்பப் பெற்றுள்ளது. இது தொடர்பாக அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரியில் NDA கூட்டணிக்கு பாமக ஆதரவு அளிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், மீண்டும் நாங்கள் ஒன்றாக இணைந்து பணியாற்ற உள்ளோம் என குறிப்பிட்டுள்ளார். 19 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்திருந்த பாமக தீவிரமாக வாக்கு சேகரித்து வந்தது குறிப்பிடத்தக்கது. <<-se>>#TNElection2026<<>>
News March 30, 2026
புதிய Era-வை தொடங்கும் CSK!

தோனி, ரெய்னா, ஜடேஜா ஆகிய ஜாம்பவான்கள் இல்லாமல் CSK <<19511596>>இன்று <<>>களம் காணுகிறது. தோனி 2 வாரங்களுக்கு ஓய்வில் இருப்பார் என்றாலும், அவர் அப்படியே Retire ஆகிவிடுவார் என்றே ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். பெரிய Legacy-யை முன்னெடுத்து செல்லும் பொறுப்பு கேப்டன் ருதுராஜ், புதிய வரவான சஞ்சு, இளஞ்சிங்கம் ஆயுஷ், ‘ஆறுச்சாமி’ துபே ஆகியோரின் கைகளில் உள்ளது. ரசிகர்களின் எதிர்பார்பை இவர்கள் பூர்த்தி செய்வார்களா?
News March 30, 2026
போர்… இந்தியாவுக்கு தான் இழப்பு

ஈரான் போரால் எண்ணெய் & எரிவாயு இறக்குமதியை சார்ந்துள்ள இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே கச்சா எண்ணெய் விலை உயர்வால் நமது இறக்குமதி செலவுகள் அதிகரித்துள்ளன. இது மேலும் 10 டாலர் வரை அதிகரிக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளதால், இந்தியா ₹1.51 லட்சம் கோடி கூடுதல் சுமை சந்திக்க நேரிடும். ஆனால் இதனை விநியோகிக்கும் USA, ரஷ்யா, கனடா, நார்வே மாதத்திற்கு ₹415 கோடி வரை கூடுதல் வருமானம் ஈட்டுகின்றன.


