News August 30, 2024
தமிழக டிஜிபி சங்கர் ஜீவால் கோவையில் ஆலோசனை

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தமிழக டிஜிபி சங்கர் ஜீவால் தலைமையில் ஐஜி செந்தில் குமார் மற்றும் டிஐஜி சரவண சுந்தர் ஆகியோர் முன்னிலையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கோவை காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், ஈரோடு காவல்துறை கண்காணிப்பாளர் ஜவகர், நீலகிரி காவல்துறை கண்காணிப்பாளர் நிஷா, திருப்பூர் காவல்துறை கண்காணிப்பாளர் அபிஷே குப்தா மற்றும் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Similar News
News August 18, 2025
தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கை

கோவையில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சியில் சேருவதற்கான நேரடி சேர்க்கையானது, 2025ஆம் ஆண்டிற்கான ஐ.டி.ஐ முதல் கட்ட கலந்தாய்வு சேர்க்கை முடிவடைந்த நிலையில், நேரடி சேர்க்கை 31ம் தேதி வரை மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெறவுள்ளது. மேலும் விபரங்களுக்கு 8825434331, 9123524155, 7373278939 எண்களில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.
News August 18, 2025
கோவை: டிகிரி போதும் SBI வங்கியில் வேலை!

கோவை மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 5180 Junior associates(Customer Support and Sales) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. ஆரம்ப கட்ட சம்பளமாக ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை வழங்கப்படும். இதற்கு வரும் 26ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க <
News August 18, 2025
கோவை ஏர்போர்டில் கடத்தல் பொருட்கள் பறிமுதல்!

கோவை விமான நிலையத்தில் இன்று ஏர் அரேபியா விமானத்தில் ஷார்ஜாவிலிருந்து வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, ரூ.37.09 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட் பண்டல்கள், 10 ட்ரோன்கள், 36 மைக்ரோபோன்களை பறிமுதல் செய்து அப்துல் ரஹீம், சையது சிராஜுதீன், ஜெய்னுலாபுதீன், முகமது சித்திக், முகமது அப்சல் உள்ளிட்ட ஐவரை கைது செய்து அவர்களிடம் மேற்கொண்டு வருகின்றனர்.