News April 20, 2024
தமிழக, கேரள எல்லையில் தீவிர சோதனை

தென்காசி மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் இன்று தெரிவித்துள்ள தகவலில், கேரளாவில் பறவை காய்ச்சல் பரவி வருவதாக கூறப்படும் நிலையில், தமிழக – கேரளா எல்லையான புளியரை பகுதியில் கால்நடைத் துறையினர் முறையான சோதனை சாவடிகள் அமைத்து கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் வரும் அனைத்து வாகனங்களும் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
Similar News
News July 5, 2025
வரதட்சனை புகாரளிக்க.. இதை தெரிஞ்சுக்கோங்க!

தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக வரதட்சனையால் பெண்கள் தொடர்ந்து பாதிப்படைந்து வருகின்றனர். தென்காசி மாவட்ட பெண்கள் வரதட்சனை கொடுமையால் பாதிக்கபட்டால் வரதட்சணை கேட்டதற்கான குறுஞ்செய்திகள், ஆடியோ பதிவுகள், கடிதங்களை கொண்டு தென்காசி மாவட்ட சமூக நல அலுவலரிடம் நேரடியாக சென்று புகாரளிக்கலாம். இந்த தகவலை அனைத்து பெண்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க!
News July 5, 2025
தென்காசியில் இ- ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்

தமிழக இணையம் சார்ந்த தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற 2,000 உறுப்பினர்களுக்கு இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு இங்கே கிளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் தகவல்களுக்கு தென்காசி மாவட்ட தொழிலாளர் சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகத்தை நேரடியாக அணுகலாம். இ- ஸ்கூட்டர் வாங்க உதவும் உங்களது நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
News July 5, 2025
தென்காசியில் ஜூலை.7ல் சோலார் பேனல் சிறப்பு முகாம்

சோலார் பேனல்கள் நிறுவி மின் உற்பத்தி செய்யும் திட்டத்திற்கு, விண்ணப்பிக்கும் முறை,வங்கி கடன் உதவி, அரசின் மானியங்கள், சோலார் பேனல் மின் உற்பத்தியால் கிடைக்கும் பயன்கள் பற்றிய விரிவான தகவல்கள், தமிழக அரசால் அங்கீகாரம் பெற்ற சோலார் பேனல் நிறுவும் நிறுவனங்களின் பிரதிநிதிகள், மின்வாரிய அலுவலர்கள் வழிகாட்டுதலில் ஜூலை 07 காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை சிறப்பு முகாம் தென்காசியில் நடக்கிறது