News January 23, 2026
தமிழக கட்சிகளின் முதல் சின்னம் எது தெரியுமா?

தவெகவுக்கு ‘விசில்’ சின்னம் அறிவிக்கப்பட்டதில் இருந்து அதனை அக்கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். கட்சி தொடங்கிய புதிதில் எல்லா கட்சியினருக்கும் இந்த கொண்டாட்டம் இருந்திருக்கும். அப்படி தமிழகத்தின் பிரதான கட்சிகள் முதல்முதலில் பெற்ற சின்னம் எது, அதை எப்போது பெற்றனர், பின்னர் என்னவாக மாறியது என்பதை மேலே போட்டோஸை வலப்பக்கமாக swipe செய்து பாருங்கள். யாருக்கு எந்த சின்னம் தற்போதும் பொருத்தமாக உள்ளது?
Similar News
News January 23, 2026
ஒரே நாளில் ₹1 லட்சம் கோடியை இழந்த அதானி

அதானி குழுமத்தின் பங்குகள் இன்று ஒரே நாளில் ₹1 லட்சம் கோடி இழப்பை சந்தித்துள்ளது. முதலீடு விவகாரத்தில் லஞ்சம் கொடுக்க முயன்ற புகாரில், அதானிக்கு சம்மன் அனுப்ப அனுமதி கேட்டு அமெரிக்க பங்குச்சந்தை ஆணையம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இதனால் அதானி குழுமத்தின் பங்கு 10% வீழ்ச்சியடைந்துள்ளது. இதன் எதிரொலியால் அதானி குழுமத்தில் முதலீடு செய்துள்ள LIC-க்கும் ₹12,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
News January 23, 2026
கேரளாவுக்கு மூன்றாவது பக்கம் உள்ளது: PM மோடி

வரவிருக்கும் தேர்தல் கேரளாவின் நிலையையும் திசையையும் மாற்றும் என PM மோடி சூளுரைத்துள்ளார். திருவனந்தபுரத்தில் நடந்த பாஜக பேரணியில் பேசிய அவர், கேரளா இதுவரை இரண்டு பக்கங்களை (UDF, LDF) மட்டுமே பார்த்துள்ளது. ஆனால், மூன்றாவதாக ஒரு பக்கம் உள்ளது. அது வளர்ச்சி & நல்லாட்சியை கொண்ட பாஜக என்றார். சபரிமலை தங்கத் திருட்டு விவகாரம் பற்றி பேசிய அவர், இதன் தீவிர விசாரணைக்கு மோடி உத்தரவாதம் தருகிறேன் என்றார்.
News January 23, 2026
இரட்டை சதம் அடித்து சர்பராஸ் மிரட்டல்!

சையத் முஷ்டாக் அலி, விஜய் ஹசாரே கோப்பைகளில் சதமடித்த சர்பராஸ் கான் ரஞ்சி டிராபியில் இரட்டை சதம் அடித்து அசத்தியுள்ளார். ஹைதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் மும்பைக்காக களமிறங்கிய அவர், 219 பந்துகளில் 227 ரன்கள்(19fours, 9 sixes) குவித்துள்ளார். உள்ளூர் போட்டிகளில் ரன் மெஷினாக உள்ள சர்பராஸுக்கு மீண்டும் எப்போது சர்வதேச போட்டிகளில் இடம் கிடைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.


