News January 23, 2025

தமிழக கடற்கரையில் 33% கடல் அரிப்பால் பாதிப்பு!

image

திருச்செந்தூர் முருகன் கோவில் கடற்கரையில் ஏற்பட்டு வரும் கடல் அரிப்பு சம்பந்தமாக தேசிய கடலோர ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானி ராமநாதன் தலைமையிலான குழு நேற்று ஆய்வு மேற்கொண்டது. பின் செய்தியாளரிடம் பேசிய விஞ்ஞானி ராமநாதன், 1990ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை எங்கள் மையம் சார்பில் செயற்கைக்கோள் வரைபடம் மூலம் ஆய்வு செய்ததில் தமிழக கடற்கரையில் 33%  கடல் அரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளது என்றார்.

Similar News

News August 10, 2025

திருச்செந்தூர் அருகே அருமையான சுற்றுலா தலம் – அய்யனார் சுணை

image

திருச்செந்தூரிலிருந்து 4 கி.மீ.தொலைவில் அய்யனர் சுணை அமைந்துள்ளது. ஆண்டு முழுவதும் ஊற்றி பெருகும் இயற்கையான நீருற்று அருகில் அய்யனார் கோவில் உள்ளது. காடுகள் சூழ்ந்த இந்த இடம் சிறந்த சுற்றுலாத்தலமாகவும் விளங்குகிறது. விடுமுறை நாட்களில் இந்த பகுதிக்கு சென்றுவரலாம். உங்க நண்பர்களுக்கு இதை *SHARE* பண்ணுங்க.

News August 10, 2025

தூத்துக்குடியில் வேலைவாய்ப்பு முகாம் மிஸ் பண்ணாதீங்க

image

தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு முகாம் வருகிற வியாழக்கிழமை 14.08.2025 காலை 10:00 மணிக்கு நடைபெற உள்ளது. சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்புமுகாம் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் நடைபெற உள்ளது. மேலும் விவரங்கள் பெற <>இங்கே க்ளிக்<<>> செய்யவும். இதை வேலைதேடும் உங்க நண்பர்களுக்கு *SHARE* பண்ணுங்க.

News August 10, 2025

நாளை தேசிய தொழில் பழகுனர் சேர்க்கை முகாம்

image

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை திறன் மேம்பாட்டு துறை சார்பில் தூத்துக்குடி கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வைத்து நாளை(ஆகஸ்ட்.11) பிரதமரின் தேசிய தொழில் பழகுனர் சேர்க்கை முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் இதுவரை அரசு மற்றும் தனியார் ஐடிஐ களில் தேர்ச்சி பெற்று தொழில் பயிற்சி பெறாதவர்கள் கலந்து கொள்ளலாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தெரிவித்துள்ளார். *ஷேர்*

error: Content is protected !!