News August 10, 2024
தமிழக ஆளுநர் இன்று கோவை வருகை

கோவை தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் இன்று காலை நடைபெறும் இந்திய குடிமை பணி தேர்வுகளில் தமிழகத்தில் இருந்து வெற்றி பெற்றவர்களுக்கான பாராட்டு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொள்ள உள்ளார். அதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலமாக கோவை வருகை தர உள்ளார். தொடர்ந்து அவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. பின்னர் மாலையில் விமான மூலமாக சென்னை செல்கிறார்.
Similar News
News January 7, 2026
கோவை அருகே சோக சம்பவம்!

கோவை மாவட்டம் செல்வபுரம் பகுதியை சேர்ந்தவர் சத்திய சூரஜ் (27). இவர் கடந்த இரண்டு மாதங்களாக உடல்நிலை குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்கு சிகிச்சை பெற்று உடல்நிலை முன்னேற்றம் அடையவில்லை. இதனால் வாழ்க்கை விரக்தி அடைந்து, சத்திய சூரஜ், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் இது குறித்து செல்வபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 6, 2026
கோவையில் மனைவி பிரிந்த ஏக்கத்தில் விபரீத முடிவு!

கோவை செல்வபுரம் என்.எஸ்.கே வீதியை சேர்ந்தவர் தனுஷ். நகை பட்டறை தொழிலாளி. மது அருந்தும் பழக்கமுடைய தனுஷ் தினமும் மது அருந்திவிட்டு மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதேபோல் நேற்று முன்தினமும் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் மனைவி கோபித்து கொண்டு தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். மனமுடைந்த தனுஷ் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். செல்வபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
News January 6, 2026
கோவை: பொங்கல் பரிசு வரலையா? உடனே CALL!

கோவை மக்களே.., பொங்கல் பரிசுடன் சேர்த்து ரூ.3000 ரொக்கத்தை வருகிற ஜன.13ஆம் தேதிக்குள் அனைவருக்கும் அளிக்க வேண்டுமென திட்டமிடப்பட்டுள்ளது. இதில், வழங்குவதில் குறைபாடு ஏற்பட்டாலோ, ஸ்டாக் இல்லை என அலுவலர்கள் பதிலளித்தாலோ, டோக்கன்களை வீடுகளுக்கே சென்று வழங்காமல் இருந்தாலோ, அல்லது தரம் குறித்த புகார்கள் இருந்தால் தயங்காமல் 1967 (அ) 1800-425-5901-ஐ அழைக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


