News March 30, 2025

தமிழக ஆளுநருக்கு மயிலாடுதுறை ஆட்சியர் வரவேற்பு

image

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே பேரழந்தூர் கிராமத்தில் இந்திய அரசு கலாச்சார அமைச்சகத்தின் சார்பில் நடைபெறும் கம்பராமாயணம் விழா துவக்க விழாவிற்கு வருகை தந்த தமிழக ஆளுநர் ஆ.என்.ரவிக்கு மயிலாடுதுறை மாவட்டத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் பூங்கொத்துகள் கொடுத்து வரவேற்பு அளித்தார்.

Similar News

News April 1, 2025

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது

image

மயிலாடுதுறையை சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் தனியார் கல்லூரியில் பயின்று வருகிறார். மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் மாணவிக்கு நபர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து மாணவி அளித்த புகாரின்பேரில் போலீசார் அந்நபரை கைது செய்து விசாரித்ததில் அவர் சீர்காழி புளியந்துறையை சேர்ந்த அழகானந்தம் (42) என தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

News April 1, 2025

விளையாட்டு விடுதி சேர்க்கை- மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் செயல்பட்டு வரும் சிறப்பு நிலை விளையாட்டு விடுதியில் 2025-26 ஆம் ஆண்டிற்கான கல்லூரி மாணவ,மாணவியர் சேர்க்கை நடைபெற உள்ளது. சிறப்பு நிலை விடுதியில் சேர்வதற்கு www.sdat.tn.gov.in -ல் விண்ணப்பிக்க வருகிற ஏப்ரல் 6ஆம் தேதி கடைசி நாளாகும். மாநில அளவிலான தேர்வு போட்டிகள் ஏப்ரல் 8ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

News April 1, 2025

திருப்பங்கள் தரும் திருவிடைக்கழி சுப்பிரமணியசாமி

image

சோழநாட்டின் திருச்செந்தூர் என போற்றப்படும் திருவிடைக்கழி சுப்ரமணியசாமி கோயிலில் முருகர் குரா மரத்தின் அடியில் இன்றும் உலாவருவதாக ஐதீகம். முருகன் தவமிருந்து சாபவிமோசனம் பெற்ற இங்கு முருகரும், ஈசனும் ஒரே சன்னதியில் அருள்பாலிக்கின்றனர். நாம் ஒருமுறை இங்கு சென்று பால் அபிஷேகம் செய்து வழிபட்டால் வாழ்வில் திருப்பங்கள் உண்டாகும் ராகு தோஷம், புத்திர தோஷம் மாங்கல்ய தோஷம் தீரும் என்பது நம்பிக்கை (Share it)

error: Content is protected !!