News August 24, 2024

தமிழக அரசை பாராட்டி ஜப்பானிய முருக பக்தர்கள் 

image

பழனியில் இன்று நடைபெற்ற அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டில், ஜப்பான் நாட்டை சேர்ந்த குருஜி பால கும்ப குருமணி தலைமையில், 55 ஜப்பானிய முருக பக்தர்கள் பங்கேற்றனர். அவர்கள், மாநாட்டை சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்தி வரும் தமிழ்நாடு அரசுக்கும், முதலமைச்சருக்கும் நன்றி தெரிவித்து, நினைவு பரிசினை அறநிலையத்துறை அமைச்சரிடம் வழங்கினார்கள். 

Similar News

News January 11, 2026

திண்டுக்கல்: மழையால் மின்தடையா? CALL பண்ணுங்க

image

திண்டுக்கல் இன்று (ஜனவரி 11) காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழையினால் உங்கள் வீட்டிலோ அல்லது உங்கள் தெருவிலோ திடீரென மின்தடை ஏற்பட்டால், பொதுமக்கள் கவலைப்படத் தேவையில்லை. உடனடியாக தமிழ்நாடு மின்சார வாரியத்தின் (TNEB) பிரத்யேக நுகர்வோர் சேவை எண்ணான 94987-94987 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம். இதன் பின்னர் மின்சாரம் சீரமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 11, 2026

திண்டுக்கல் பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் https://parivahan.gov.in/ என்ற இணையதளத்தில் மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம்.இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க

News January 11, 2026

திண்டுக்கல்லில் வசமாக சிக்கிய குற்றவாளி!

image

திண்டுக்கல்லில் 2022ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கில், தூத்துக்குடியைச் சேர்ந்த மாரிமுத்து மகன் ஸ்ரீரங்க பாண்டியன் (23) கைது செய்யப்பட்டார். பின்னர் பிணையில் வெளியே வந்தார். தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகாததால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி தலைமையில் போலீஸார் கள்ளக்குறிச்சியில் பதுங்கியிருந்த அவரை கைது செய்தனர்.

error: Content is protected !!