News April 27, 2024
தமிழக அரசை பாராட்டிய ஐகோர்ட்

அனைத்து மத்திய சிறைகளிலும் வழக்கு விவரங்களை முழுமையாக அறிந்து கொள்ள தொடுதிரை வசதி செய்ததற்காக தமிழக அரசுக்கு ஐகோர்ட் கிளை பாராட்டு தெரிவித்துள்ளது. இதுகுறித்து நேற்று கருத்து தெரிவித்துள்ள உயர்நீதிமன்ற மதுரை கிளை கைதிகளின் வசதிக்காக தமிழகத்தில் உள்ள 8 மத்திய சிறைகள், 5 பெண்கள் சிறைகளில் உள்ள இந்த தொடுதிரை இயந்திரம், சிறை கைதிகளுக்கு மிகவும் பயனுள்ளது என்று கூறி பாராட்டியது.
Similar News
News April 3, 2026
மதுரை: ஹவுஸ் ஓனர் தொல்லையா? உடனே CALL

மதுரை மக்களே வாடகை வீடுகளில் குடியீருக்கீங்களா? 3 மாதத்துக்கு முன்னரே வீட்டு ஓனர் வீட்டு வாடகையை உயர்த்துவது (அ) முன்னறிவிப்பின்றி உங்களை தீடீரென்று வீட்டை காலி செய்ய சொன்னால் என்ன செய்வது என்று யோசீக்கிறீர்களா? இனி இதை பண்ணுங்க. உங்களுக்காகவே (TNRRLA 2017) என்ற சட்டத்தின் கீழ் மதுரை வாடகை தீர்வாளர் அதிகாரியிடம் (9445000449, 9445000450, 8870678220) புகாரளியுங்க.மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.
News April 3, 2026
மதுரை: மக்கள் ஆட்சி மாற்றத்திற்கு விரும்புகின்றனர் – செல்லூர் ராஜு

மதுரை வடக்கு தொகுதியில் நேற்று தே.ஜ கூட்டணி சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, மக்கள் ஆட்சி மாற்றத்திற்கு விரும்புகிறார்கள் எனவே மதுரையில் 10 தொகுதியில் நாம் அமோக வெற்றி பெறுவோம் என்றார். டாக்டர் சரவணன் கூறியதாவது, எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்னும் ஒரே மாதத்தில் அதிமுக ஆட்சி மலர போகிறது. அதிமுக தேர்தல் அறிக்கை மணக் கும் மல்லிகையாக உள்ளது என்றார்.
News April 3, 2026
மதுரை: அரசு பஸ் – கார் மோதிய விபத்தில் சிக்கியவர் பலி.!

சோழவந்தான் அருகே கடந்த வாரம் அரசு பஸ்-கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் சீனிவாசன் (52) என்பவர் படுகாயமடைந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி சீனிவாசன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த சோழவந்தான் போலீசார், சீனிவாசன் உடலை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


