News January 20, 2026
தமிழக அரசு Vs தமிழக கவர்னர்

திமுக ஆட்சியில் தொடர்ந்து 4-வது ஆண்டாக RN ரவி, சட்டப்பேரவை உரையை புறக்கணித்துள்ளார். 2021-ல் திமுக ஆட்சியமைத்த பிறகு, RN ரவி கவர்னராக பதவியேற்றார். 2022-ல் மட்டுமே அவர் உரையை முழுவதும் வாசித்தார். 2023-ல் சில பகுதிகளை தவிர்த்ததால் சர்ச்சையாகி பாதியில் வெளியேறினார். 2024, 2025-ல் தேசிய கீதம் பாடவில்லை என உரையை வாசிக்கவில்லை. இப்போது, <<18904228>>மைக் ஆஃப்<<>> செய்யப்பட்டதாக கூறி வெளிநடப்பு செய்துள்ளார்.
Similar News
News January 28, 2026
புதுச்சேரி: 89.87 சதவீதம் படிவம் பூர்த்தி

புதுச்சேரியில், மொத்தம் உள்ள 10 லட்சத்து 21 ஆயிரத்து 578 வாக்காளர்களில், 9 லட்சத்து 18 ஆயிரத்து 111 பேர் கணக்கெடுப்பு படிவங்களை சமர்ப்பித்து, தேர்தல் துறையின் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு கொடுத்துள்ளனர். இதில் 89.87 சதவீதம் தேர்தல் துறையின் படிவத்தை பூர்த்தி செய்துள்ளனர். புதுச்சேரியில் ஏற்கனவே இருந்த 962 ஓட்டுச்சாவடிகள் எண்ணிக்கை 1099 ஆக தற்போது உயர்த்தப்பட்டுள்ளது.

ராமதாஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை: தவெக

அதிமுக கூட்டணியில் அன்புமணியும், திமுக கூட்டணியில் விசிகவும் ராமதாஸ் தரப்பை இணைக்க மறுப்பு தெரிவித்து வருவதாக தகவல் வெளியாகிறது. இதனிடையே, தவெக தரப்பில் ராமதாஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், இதுவரை ராமதாஸ் தரப்பு உள்பட எந்த கட்சியுடனும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை என தவெக நிர்வாகி கூறியுள்ளார்.