News November 7, 2025
தமிழக அரசின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை

சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்க தாமதம் செய்து வருவதாக தமிழக அரசு தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. ஆனால், இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என கவர்னர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. அக்.31-ம் தேதி வரை பெறப்பட்ட மொத்த மசோதாக்களில் 81% ஒப்புதல் அளிக்கப்பட்டதாகவும், கடந்த 3 மாதங்களுக்குள் 95% மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 7, 2025
நடிகையிடம் அநாகரிக கேள்வி: நடிகர் சங்கம் கண்டனம்

நடிகை <<18218676>>கௌரி கிஷனுக்கு நடந்த சம்பவத்தை <<>>வன்மையாக கண்டிப்பதாக நடிகர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. பத்திரிகையாளர் சந்திப்புகளில் ஒரு சில வக்கிரமான நபர்கள், பத்திரிக்கையாளர் போர்வையில் நடிகைகளை ஏளனமாக கேள்வி கேட்பது கவலை அளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இனி இதுபோன்ற சம்பவம் நடப்பதை தடுக்க முன்னெடுப்புகள் தொடங்கப்படும் எனவும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
News November 7, 2025
எந்த நோட்டு எவ்வளவு மதிப்பு? ஸ்வைப் பண்ணுங்க

இந்தியாவில் புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகளின் மதிப்பு எவ்வளவு தெரியுமா? நாம் பெரும்பாலும் டிஜிட்டல் பேமெண்ட் பயன்படுத்துகிறோம். இருப்பினும், ரூபாய் நோட்டுகள் அதிகளவில் புழக்கத்தில் இருந்து வருகின்றன. இந்நிலையில், சமீபத்திய RBI தரவுகள்படி, எந்த ரூபாய் நோட்டு, எவ்வளவு மதிப்பில் புழக்கத்தில் உள்ளன என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE IT
News November 7, 2025
கடத்தல் வழக்கு: போலீஸுக்கு அன்புமணி கண்டனம்

தமிழகத்தில் <<18226171>>பெண்களுக்கு எதிரான குற்றங்கள்<<>> அதிகரிக்கும் நிலையில், திமுகவை எந்த கொம்பனாலும் தொட முடியாது என CM ஸ்டாலின் வீர வசனம் பேசி கொண்டிருப்பதாக அன்புமணி விமர்சித்துள்ளார். மேலும், பெண்ணை மீட்க வேண்டிய போலீஸ், கடத்தல் தொடர்பாக புகார் எதுவும் வரவில்லை என கூறுவது பொறுப்பற்ற பதில் எனவும் சாடியுள்ளார். எவரேனும் புகார் அளித்தால்தான் போலீஸ் நடவடிக்கை எடுக்குமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.


