News December 30, 2025
தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு ஒப்புதல்

ஒவ்வொரு ஆண்டும் டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழா நிகழ்ச்சியில் சுழற்சி முறையில், மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் இடம்பெறும். 2025-ல், தமிழகத்தின் ஊர்தி தேர்வு செய்யப்படவில்லை. இந்நிலையில், 2026-ம் ஆண்டில் நடைபெற உள்ள 77-வது குடியரசு தின நிகழ்ச்சிக்கு, தமிழக அரசின் அலங்கார ஊர்தி தேர்வு செய்யப்பட்டுள்ளது. பசுமை மின்சக்தி என்ற தலைப்பிலான தமிழக அரசின் ஊர்திக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
Similar News
News December 31, 2025
BREAKING: பொங்கல் பரிசை அறிவித்தது தமிழக அரசு

அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் பொங்கல் தொகுப்புடன் ரொக்கப் பணம் வழங்க அரசு திட்டமிட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்புக்காக ₹248 கோடி ஒதுக்கீடு செய்துள்ள தமிழக அரசு, 2.22 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு நீளக் கரும்பு வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இதில் ரொக்கப்பணம் குறித்த எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை.
News December 31, 2025
போதையில் இருப்பவர்களை வீட்டில் இறக்கிவிட திட்டம்!

பெங்களூருவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அதீத குடிபோதையில் இருப்பவர்களை வீட்டில் இறக்கிவிட அரசு ஏற்பாடு செய்துள்ளதாக கர்நாடக அமைச்சர் பரமேஸ்வரா தெரிவித்துள்ளார். போதையில் இருக்கும் அனைவரையும் அழைத்து செல்லமாட்டோம். நடக்க முடியாதவர்கள், சுயநினைவை இழந்தவர்கள் மட்டும் அழைத்து செல்லப்படுவார்கள். மேலும், போதை நீங்கும் வரை ஓய்வெடுக்க 15 இடங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
News December 31, 2025
திமுகவுடன் தான் கூட்டணி: ப.சிதம்பரம்

<<18699142>>பிரவீன் சக்ரவர்த்தி<<>> தமிழகத்தின் கடனை பற்றி பேசியிருந்த விவகாரத்தை தொடர்ந்து, தவெகவுடன் காங்., கூட்டணியா என்ற சலசலப்பு எழுந்தது. இதுகுறித்து பேட்டியளித்துள்ள ப.சிதம்பரம், விஜய் கட்சிக்கு வாழ்த்து தெரிவித்தார். அதேநேரம், திமுகவுடன் தான் கூட்டணி என்றும், தொகுதி பங்கீடுக்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டார். மேலும், உ.பி., உடன் தமிழகத்தை ஒப்பிடக்கூடாது என்றும் அவர் கூறினார்.


