News December 11, 2025

தமிழகம் வருகிறார் ஜனாதிபதி

image

ஜனாதிபதி முர்மு வரும் 17-ம் தேதி வேலூர், ஸ்ரீபுரம் நாராயணி பொற்கோயிலுக்கு வருகை தர உள்ளார். அவருடன் கவர்னர் ரவி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகனும் வருகின்றனர். ஸ்ரீநாராயணி அம்மன், 1,800 கிலோ வெள்ளியால் அமைக்கப்பட்ட விநாயகர், சொர்ணலட்சுமி, பெருமாள் கோயில்களில் சாமி தரிசனம் செய்கிறார். பின்னர், கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்ட தியான மண்டபத்தை திறந்து வைத்து மரங்களை நடுகிறார்.

Similar News

News December 14, 2025

செங்கல்பட்டு: Certificate இல்லையா? கவலை வேண்டாம்!

image

உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதாவது <>E-பெட்டகம் <<>>என்ற இணையதளத்தில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து OTP சரிபார்த்து உள்ள சென்றால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களை எளிமையாக பதிவிறக்கம் செய்யாலாம்.

News December 14, 2025

BREAKING: இனி இவர்களுக்கும் ₹1000.. அறிவித்தார் ஸ்டாலின்

image

மகளிர் உரிமைத் தொகை விரிவாக்கத் திட்டத்தின் கீழ் கூடுதலாக 17 லட்சம் பெண்களுக்கு ₹1000 வழங்கப்பட்டது. ஆனால் விண்ணப்பித்தும் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படவில்லை. இது சர்ச்சையான நிலையில், விடுபட்ட தகுதியுடைய குடும்ப தலைவிகள் கோரிக்கை விடுத்தால், அவர்களுக்கும் ₹1000 வழங்கப்படும் என்று CM ஸ்டாலின் சற்றுமுன் அறிவித்துள்ளார்.

News December 14, 2025

விஜய் கட்சியில் மோதல் வெடித்தது

image

தவெகவில் புஸ்ஸி ஆனந்த் – ஆதவ் இடையே அதிகார மோதல் வெடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திருவள்ளூரில் தவெக நிகழ்ச்சிக்காக வைக்கப்பட்ட பேனரில் ஆதவ் படத்தை வைத்ததாக கூறி வட்டச்செயலாளர் பிரதீப் நீக்கப்பட்டுள்ளார். இதனை கண்டித்து, மாவட்ட செயலாளருக்கு எதிராக தவெகவினரே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கெனவே புதுச்சேரி நிகழ்ச்சிக்காக ஆதவ் போன் செய்தபோது, மா.செ.,க்கள் அவரின் அழைப்பை எடுக்கவில்லையாம்.

error: Content is protected !!