News September 14, 2024
தமிழகம் வந்த 19 மீனவர்கள்

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ராமநாதபுரம் மற்றும் நாகை மாவட்டங்களைச் சேர்ந்த 19 மீனவர்கள், நேற்றிரவு இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தனர். நாகை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்த 19 மீனவர்கள், கடந்த ஆகஸ்ட் மாதம் 24 ஆம் தேதி விசைப்படகுகளில், கடலில் மீன் பிடித்த போது இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News October 23, 2025
நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில் நேற்று (அக்.22) இரவு 10 மணி முதல் இன்று(அக்.23) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் கைபேசி எண்ணும் வழங்க
News October 22, 2025
9 மனுக்களுக்கு தீர்வு காண எஸ்.பி உத்தரவு

நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர் நாள் கூட்டம் இன்று(அக்.22) நடைப்பெற்றது. இக்கூட்டத்திற்கு போலீஸ் சூப்ரண்ட் செல்வகுமார் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் குறைகள் கேட்டறிந்தார். பின்னர் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 9 மனுக்களை பெற்ற விரைவில் உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
News October 22, 2025
நாகை: புகார் அளிக்க WhatsApp எண்- ஆட்சியர் அறிவிப்பு

நாகப்பட்டினம் மாவட்டத்தில் தொடர் கனமழையினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் அவசர தேவை உதவிக்கும் பொதுமக்கள் மாவட்ட பேரிடர் கட்டுபாட்டு மையத்தில் 24 மணி நேரமும் செயல்படும் அவசர கால தொடர்பு எண் வெளியிடப்பட்டுள்ளது. மக்களின் புகார்களை 1077, 18002334233 மற்றும் 81100 05558 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் 04365-251992 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.