News December 23, 2025
தமிழகம் முழுவதும் கலைத்திருவிழா

ஜன.14-ம் தேதி சென்னை சங்கமம் விழாவை CM ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இதில், தமிழகத்தின் புகழ்பெற்ற 250 கலைஞர்கள் இணைந்து, இசை, நடன நிகழ்ச்சிகளை நடத்த உள்ளனர். ஜன.15 முதல் 18 வரை 4 நாள்களுக்கு சென்னையில் பல்வேறு இடங்களில் சங்கமம் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இந்நிலையில், தமிழகம் முழுதும் இதேபோன்று பாரம்பரிய கலைத்திருவிழாவை நடத்த, கலெக்டர்களுக்கு CM ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News December 25, 2025
‘ஜனநாயகன்’ படத்தின் அடுத்த அப்டேட்!

ஜன.9-ம் தேதி ‘ஜனநாயகன்’ படம் வெளியாக உள்ளதால், படக்குழு அடுத்தடுத்த அப்டேட்களை அளித்து வருகிறது. ஏற்கெனவே படத்தின் 2 பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ள நிலையில், 3-வது பாடல் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் 2 பாடல்களும் மாஸ் சாங் ஆக இருந்த நிலையில், ‘செல்ல மகளே’ என்ற இந்த பாடல், அனிருத் இசையில், விஜய் குரலில் வரும் ஒரு மெலடி பீட் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 25, 2025
‘கரப்பான் பூச்சி பால்’ தெரியுமா?

ஆட்டுப் பால், மாட்டுப் பால் தெரியும். ஆனால் கரப்பான் பூச்சி பால் தெரியுமா? ‘பசிபிக் பீட்டில்’ என்ற கரப்பான் பூச்சி சுரக்கும் புரத படிகங்கள், பசுவின் பாலை விட 4 மடங்கு சத்துக்கள் கொண்டவை என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ஒரு கிளாஸ் பால் தயாரிக்க 400 கரப்பான் பூச்சிகள் தேவைப்படுவதால் இதை எடுப்பது அவ்வளவு எளிதல்ல. ஆனால் எதிர்காலத்தில் இது சூப்பர் ஃபுட் ஆகலாம் என கூறப்படுகிறது. நீங்க இத குடிப்பீங்களா?
News December 25, 2025
டிரம்ப் வாழ்த்து சொன்னாலும் சர்ச்சை தான் போல!

கிறிஸ்துமஸ் வாழ்த்து சொல்ல சொன்னால், அதிலும் சர்ச்சையை கிளப்பியுள்ளார் டிரம்ப். SM-ல், ‘நாட்டை அழிக்க துடிக்கும் தீவிர இடதுசாரி கும்பல்கள் உள்பட அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்’ என அவர் பதிவிட்டுள்ளது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக குழந்தைகளுடன் ஜாலியாக உரையாடிய அவர், சாண்டாவை கண்காணிப்பதாகவும், ஒருபோதும் Bad Santa-வை நாட்டுக்குள் ஊடுருவ விடமாட்டோம் எனவும் கிண்டலாக குறிப்பிட்டார்.


