News January 2, 2026

தமிழகமே எதிர்பார்க்கும் அறிவிப்பு வெளியாகிறது

image

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் பல ஆண்டுகால போராட்டத்திற்கு நாளை விடிவுகாலம் பிறக்க இருப்பதாக கூறப்படுகிறது. பழைய ஓய்வூதிய திட்டத்தை (OPS) அமல்படுத்த கோரி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஜன.6 முதல் ஸ்டிரைக்கில் ஈடுபடுவதாக அறிவித்த நிலையில், அவர்களுடன் அமைச்சர்கள் இன்று பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், தமிழகமே வியக்கும் வகையில், நாளை OPS குறித்த அறிவிப்பை CM ஸ்டாலின் வெளியிடுவார் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.

Similar News

News January 29, 2026

தவெக 3-ம் ஆண்டு தொடக்க விழா: விஜய் அறிவிப்பு

image

பரபரப்பான அரசியல் சூழலில், தவெக 3-ம் ஆண்டு தொடக்க விழாவை கொண்டாடவுள்ளது. பிப்.2, காலை 11 மணிக்கு பனையூர் தலைமை அலுவலகத்தில் விஜய் தலைமையில் விழா நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில், தேர்தல் கூட்டணி நிலைப்பாடு, வேட்பாளர் பட்டியல், தான் போட்டியிடும் தொகுதி ஆகியவற்றை விஜய் அறிவிப்பார் என தகவலறிந்தவர்கள் கூறுகின்றனர்.

News January 29, 2026

₹5 லட்சம் வரை கடனுக்கு வட்டி இல்லை

image

பெண்களே, தொழில் தொடங்கும் ஆசை இருக்கிறதா? உங்களுக்காகவே ₹5 லட்சம் வரை வட்டியில்லாமல் கடன் வழங்குகிறது மத்திய அரசின் Lakhpati didi திட்டம். சுய உதவிக் குழுவில் இருப்பவர்கள், ஆண்டு வருமானம் ₹3 லட்சத்திற்கும் குறைவாக இருப்பவர்கள் இந்த திட்டத்தில் கடன் பெறலாம். இதற்கு, அருகில் இருக்கும் SHG அலுவலகத்தையோ அல்லது பஞ்சாயத்து ஆபீசையோ அணுகுங்கள். அனைத்து பெண்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.

News January 29, 2026

குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற கணவன் – மனைவி!

image

வீட்டில் ஒருவருக்காவது அரசு வேலை கிடைக்காதா என ஏங்குபவர்களுக்கு மத்தியில், இந்த தம்பதிக்கு டபுள் ட்ரீட் கிடைத்துள்ளது. ஆந்திராவை சேர்ந்த ஹேமச்சந்திரா- வினிதா தம்பதி ஹைதராபாத்திலுள்ள IT கம்பெனியில் வேலை பார்த்து வந்தனர். ஆனாலும், அரசு வேலைக்கு முயற்சித்தவர்களுக்கு, குரூப் 2 தேர்வு முடிவு இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது. வினிதா சப்-ரிஜிஸ்டாராக, ஹேமச்சந்திரா கலால் வரி ஆய்வாளராக தேர்வாகியுள்ளனர்.

error: Content is protected !!