News November 30, 2025
தமிழகத்தை நெருங்கும் புயல்.. முக்கிய அலர்ட்!

7 கிமீ., வேகத்தில் நகர்ந்து வரும் ‘டிட்வா’ புயல், சென்னையில் இருந்து 280 கிமீ., தொலைவில் உள்ளது. இதனால் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், இன்று ராணிப்பேட்டை & திருவள்ளூர் மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சி, விழுப்புரம், வேலூர், தி.மலை உள்ளிட்ட வடமாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கவனமாக இருங்கள் மக்களே.
Similar News
News December 3, 2025
‘2 திமுக அமைச்சர்கள் தவெகவில் இணைகிறார்கள்’

செங்கோட்டையனை தொடர்ந்து பல அரசியல் தலைவர்கள் தவெகவில் இணையவிருப்பதாக ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். மக்கள் சக்தி எங்கே இருக்கிறதோ, அங்கே அரசியல் தலைவர்கள் வருவது வழக்கம்தான். அந்த வகையில், திமுகவின் இரண்டு சிட்டிங் அமைச்சர்கள், பிப்ரவரிக்குள் தவெகவில் இணைவார்கள் எனக் கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார். மேலும், டெல்டா மண்டலத்தை சேர்ந்த முக்கிய தலைவரும் தவெகவில் இணையவிருப்பதாக கூறப்படுகிறது.
News December 3, 2025
2-வது ODI: சவாலை மிஞ்சி சாதிப்பாரா ருதுராஜ்?

முதல் ODI-ல் 8 ரன்னில் அவுட்டான நிலையில், இன்று வாய்ப்பு கிடைத்தால் பெரிய ஸ்கோரை அடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ருதுராஜ் தள்ளப்பட்டுள்ளார். இன்றும் அவர் சறுக்கினால், 3-வது ODI-ல் பண்ட், திலக் வர்மா ஆகியோரில் ஒருவர் அவரின் இடத்தை பிடிக்கலாம். இந்த வாய்ப்புகளும் துணை கேப்டன் ஷ்ரேயஸ் அணிக்கு திரும்பும் வரை மட்டுமே. அவர் வந்தால், இந்த வாய்ப்பும் குறைந்துவிடும். சோதனையை எதிர்கொண்டு சாதிப்பாரா ருதுராஜ்?
News December 3, 2025
சமந்தாவுக்கு பெரிய சர்ப்ரைஸ் கொடுத்த ராஜ் நிடிமொரு

சமந்தாவுக்கும், அவரது காதலர் ராஜ் நிடிமொருவுக்கும் கோவை ஈஷா ஆசிரமத்தில் திருமணம் நடந்தது. இந்நிலையில், திருமணமான முதல் நாளே, ராஜ் நிடிமொரு சமந்தாவுக்கு பெரிய சர்ப்ரைஸ் ஒன்றை கொடுத்துள்ளார் என தகவல் கசிந்துள்ளது. ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸில் ஒரு அழகான வீட்டை சமந்தாவுக்கு பரிசளித்துள்ளாராம். விரைவில் இந்த புது வீட்டில் இருவரும் குடியேற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.


