News November 3, 2025
தமிழகத்தை தலைகுனிய வைத்த திமுக: தமிழிசை

தமிழகத்தை தலைகுனிய விடமாட்டோம் என விளம்பரத்திற்கு சொல்லிக் கொண்டிருக்கும் ஸ்டாலின் அரசு இன்று தலைகுனிய வைத்திருக்கிறது என்று தமிழிசை விமர்சித்துள்ளார். ஆட்சியாளர்கள் ஒவ்வொருவரும் வெட்கப்பட வேண்டிய சம்பவம் கோவையில் விமான நிலையம் பின்புறம் கொடூரமாக நடந்தேறி இருக்கிறது என சாடிய அவர், தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கவும் வலியுறுத்தினார்.
Similar News
News November 4, 2025
ராசி பலன்கள் (04.11.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News November 4, 2025
போட்டிபோட்டு ஆஃபர் அறிவித்த நிறுவனங்கள்

Zepto-வை தொடர்ந்து Instamart-ம் புதிய சலுகைகளை அறிவித்துள்ளது. அதன்படி, ₹299-க்கு மேல் ஆர்டர் செய்தால், டெலிவரி கட்டணம் உள்பட எவ்வித கூடுதல் கட்டணங்களும் வசூலிக்கப்படாது என்று தெரிவித்துள்ளது. ₹199-க்கு மேல் ஆர்டர் செய்தால் ₹16, அதற்கு கீழ் ஆர்டர் செய்தால் ₹30 சராசரியாக வசூலிக்கப்படும். முன்னதாக, இலவச டெலிவரிக்கான குறைந்தபட்ச ஆர்டர் தொகையை ₹199-ல் இருந்து ₹99 ஆக <<18188504>>Zepto<<>> குறைத்தது.
News November 4, 2025
தூங்கும் முன் இதை பார்க்கிறீர்களா? PLS வேணாம்!

தூங்கும்முன் மொபைலில் ரீல்ஸ் பார்ப்பது, தூக்கத்தை வெகுவாக பாதிக்கும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். மொபைல் ஸ்கிரீனில் இருந்து வெளியாகும் நீல ஒளி, தூக்கத்துக்கான மெலடோனின் ஹார்மோன் சுரப்பை தடுக்கிறது. வீடியோ பார்த்துக் கொண்டே இருந்தால் மூளை விழிப்பிலேயே இருக்கும். இதனால் தூக்கமின்மை, மந்தமான மனநிலை போன்ற பாதிப்புகள் ஏற்படும். ஆகவே, தூங்குவதற்கு 30-60 mins-க்கு முன் மொபைல் பார்ப்பதை நிறுத்தவும்.


