News January 15, 2026
தமிழகத்தில் EVM இயந்திரங்கள் சரிபார்ப்பு!

2026 தேர்தலையொட்டி தமிழகத்தில், EVM இயந்திரங்களின் முதற்கட்ட சரிபார்ப்பு பணிகள் நிறைவுபெற்றுள்ளன. 1.10 லட்சம் கட்டுப்பாட்டு அமைப்புகளில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் தேர்தல் அதிகாரிகளும், பெல் நிறுவன பொறியாளர்களும் இப்பணியை மேற்கொண்டனர். மொத்தம் 1.75 லட்சம் வாக்குப்பதிவு இயந்திரங்கள், 1.16 லட்சம் VVPAT இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்டுள்ளன.
Similar News
News January 23, 2026
BREAKING: இந்தியாவுக்கு 209 ரன்கள் டார்கெட்

2-வது டி20 ஆட்டத்தில் நியூசி., அணி இந்தியாவுக்கு 209 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. அதிரடியாக பேட்டிங்கை தொடங்கிய அந்த அணி, அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்தது. ரச்சின் ரவீந்திரா(44) மட்டும் சற்று நிலைத்து நின்று ஆடினார். இறுதியில் கேப்டன் சாண்ட்னர் அதிரடியாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்க 20 ஓவர் முடிவில் 208/6 ரன்கள் குவித்தது. இந்தியா தரப்பில் குல்தீப் யாதவ் 2 wkts வீழ்த்தினார்.
News January 23, 2026
80 ஆண்டு உறவை முறித்துக் கொண்ட டிரம்ப்

உலக சுகாதார அமைப்பிலிருந்து(WHO) அமெரிக்கா வெளியேறியுள்ளது. 80 வருடங்களாக தொடர்ந்த இந்த பந்தம், இன்றுடன் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்ததுள்ளது. கொரோனா தொற்று பரவலின்போது WHO சரியாக செயல்படவில்லை என குற்றம்சாட்டிய டிரம்ப், அதிலிருந்து விலக முடிவு செய்தார். WHO பட்ஜெட்டில் கிட்டத்தட்ட கால்வாசி பகுதியை நிதியாக US வழங்கிவந்த நிலையில், இது அந்த அமைப்புக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
News January 23, 2026
ரயில் லேட்டானால் ஃப்ரீ சாப்பாடு கிடைக்கும் தெரியுமா

இந்தியாவில் ரயில்கள் தாமதமாக ஓடுவது வழக்கமே. ஆனால், IRCTC விதிகளின் படி, ரயில்கள் 2 மணி நேரத்திற்கும் மேல் தாமதமானால் பயணிகளுக்கு இலவச உணவு அல்லது சிற்றுண்டி வழங்கப்படும். இந்த வசதிகள் ராஜ்தானி, சதாப்தி & துரந்தோ போன்ற பிரீமியம் ரயில்களுக்கு மட்டுமே பொருந்தும். காலையில் தாமதமானால் டீ, காபி & பிஸ்கட் வழங்கப்படும். மதியம் அல்லது இரவில் தாமதமானால் சாதம், பருப்பு & காய்கறிகள் உணவு வழங்கப்படும்.


