News December 15, 2025

தமிழகத்தில் 65 தொகுதிகளில் BJP போட்டியா?

image

டெல்லியில் நயினார் நாகேந்திரன், அமித்ஷாவை சந்தித்து பேசினார். அப்போது, தமிழகத்தில் பாஜக தனிப்பட்ட செல்வாக்குடன் இருக்கும் 50 தொகுதிகள், கூட்டணியுடன் வெல்ல வாய்ப்புள்ள 15 தொகுதிகள் என மொத்தம் 65 தொகுதிகளின் பட்டியலை வழங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. பரமக்குடி, நாங்குநேரி, கோவை வடக்கு, பல்லடம், மயிலாப்பூர், தி.நகர், குமரி, நெல்லை, மதுரை வடக்கு உள்ளிட்ட தொகுதிகள் பட்டியலில் உள்ளதாக கூறப்படுகிறது.

Similar News

News December 16, 2025

‘கூலி’ படம் அவ்வளவு மோசமில்லை: அஸ்வின்

image

சோஷியல் மீடியாவில் விமர்சிக்கப்பட்ட அளவிற்கு ‘கூலி’ படம் ஒன்றும் அவ்வளவு மோசமாக இல்லை என அஸ்வின் தெரிவித்துள்ளார். என்னை பொறுத்தவரை ஒரு படத்தை முழுவதுமாக ஒரே அமர்வில் பார்க்க முயற்சிப்பேன், இந்த படத்தை அப்படி பார்க்க முடிந்தது எனக் குறிப்பிட்டுள்ளார். விமர்சகர்கள் தெரிவித்த அளவிற்கு குறைகள் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். உங்களுக்கு ‘கூலி’ படம் பிடிச்சிருந்ததா?

News December 16, 2025

மிரட்டும் மழை.. 15 மாவட்டங்களுக்கு அலர்ட்

image

தமிழகத்தின் 15 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் இரவு 10 மணி வரை மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. அதன்படி, செங்கை, காஞ்சி, விழுப்புரம், அரியலூர், சென்னை, கடலூர், மயிலாடுதுறை, நாகை, ராணிப்பேட்டை, தஞ்சை, திருவள்ளூர், திருவாரூர், தி.மலை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால், வெளியே செல்பவர்கள் கவனமுடன் இருங்கள். உங்கள் பகுதியில் மழையா?

News December 16, 2025

ரெட் கலர் கிறிஸ்துமஸ் தாத்தா எப்படி வந்தார் தெரியுமா?

image

சாண்டா கிளாஸ் என்று அழைக்கப்படும் கிறிஸ்துமஸ் தாத்தா ஏன் சிவப்பு நிற ஆடையில் இருக்கிறார் தெரியுமா? சாண்டா கிளாஸ், பச்சை, பிரவுன் உள்ளிட்ட பல்வேறு நிறங்களில் இருந்த நிலையில், 1931-ம் ஆண்டு கோக கோலா, விளம்பரத்திற்காக சாண்டா கிளாஸுக்கு ‘ரெட்’ கலரில் தனித்துவமான தோற்றத்தை உருவாக்கியது. இதன்மூலம், அவர் உலகம் முழுவதும் புது அடையாளத்தை பெற்றார். அந்த சாண்டா கிளாஸை தான் இன்று நாம் பார்க்கிறோம்.

error: Content is protected !!