News January 5, 2026
தமிழகத்தில் 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: IMD

தெற்கு கேரள கடலோரப் பகுதிகளையொட்டிய தென்கிழக்கு அரபிக் கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக IMD தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கணித்துள்ளது. அதேசமயம் அதிகாலை வேளைகளில் லேசான பனிமூட்டம் காணப்படும் என கூறப்பட்டுள்ளது. மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் ஜன.8-ம் தேதி வரை சூறாவளிக்காற்று வீசும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 22, 2026
அன்புமணிக்கு ‘மாம்பழம்’.. பேனரில் உறுதியான சின்னம்

மதுராந்தகத்தில் நாளை நடைபெறவுள்ள NDA கூட்டணி பரப்புரை பொதுக்கூட்டத்திற்காக வைக்கப்பட்ட பேனரில் ‘மாம்பழம்’ சின்னம் இடம்பெற்றது கவனத்தை ஈர்த்துள்ளது. அன்புமணிக்கு மாம்பழச் சின்னம் கிடைக்காது என ராமதாஸ் தரப்பு கூறிவரும் நிலையில், பேனரில் மாம்பழச் சின்னம் இடம்பெற்றுள்ளது. அதேபோல், அந்த பேனரில் பிரேமலதா, கிருஷ்ணசாமி புகைப்படங்கள் இடம்பெறாததால், அவர்கள் NDA -வில் இணைவில்லை என்பது உறுதியாகியுள்ளது.
News January 22, 2026
பள்ளிகள் விடுமுறை.. நாளை முதல் சிறப்பு ரயில்கள்

<<18883212>>பள்ளிகள் தொடர் விடுமுறையையொட்டி<<>> தெற்கு ரயில்வே மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மக்கள் நெரிசலின்றி ஊருக்கு செல்ல ஏதுவாக, எழும்பூர் – குமரி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. நாளை இரவு 11.45 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு அடுத்த நாள் மதியம் 1 மணிக்கு சிறப்பு ரயில் குமரிக்கு செல்கிறது. மறுமார்க்கத்தில் ஜன.26-ல் சிறப்பு ரயில் இயக்கப்படும். முன்பதிவு தொடங்கியுள்ளது. முந்துங்கள்!
News January 22, 2026
ஓபிஎஸ் NDA கூட்டணிக்கு வருவார்: அண்ணாமலை

தனது ஆதரவாளர்கள் அடுத்தடுத்து விலகி வரும் நிலையில், OPS தனிமரமாக நிற்கிறார். இந்நிலையில், பொறுமையின் உருவமாக இருக்கக்கூடிய OPS மீண்டும் NDA கூட்டணிக்கு வருவார் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். சத்திய சோதனை எல்லாம் கடந்து நிற்கக் கூடிய ஒரு தலைவர் OPS. அரசியலில் எதுவும் நிரந்தரமில்லை என்று சொல்வார்கள்; அதனால் அவர் விரைவில் நல்ல முடிவை எடுப்பார் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


