News January 15, 2026
தமிழகத்தில் 5 IAS அதிகாரிகள் இடமாற்றம்

பொங்கல் கொண்டாட்டங்களுக்கு மத்தியில் 5 IAS அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சுற்றுலா வளர்ச்சிக் கழக ஆணையராக இன்னசென்ட் திவ்யா, டாஸ்மாக் மேலாண்மை இயக்குநராக கிறிஸ்துராஜ், தொழில்நுட்பக் கல்வி இயக்குநராக விசாகன், சுகாதாரத்துறை கூடுதல் செயலாளராக உமா, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை கூடுதல் செயலாளராக ரத்னா இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
Similar News
News February 1, 2026
பட்ஜெட்டில் TN-க்கு கிடைக்கும் அங்கீகாரம்

தமிழ்நாட்டின் ஆதிச்சநல்லூரில் தொல்லியல் கலாசார மையம் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. பழவேற்காடு ஏரியில் பறவைகளை பார்வையிடும் சுற்றுலாவை ஊக்குவிப்பதற்கான திட்டமும், பொதிகை மலையில் மலையேற்ற சுற்றுலாவை ஊக்குவிக்க நடவடிக்கையும் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழ்நாட்டின் பாரம்பரியத்தையும், சுற்றுச்சூழல் வளத்தையும் உலக மக்கள் அறிவர் என கூறுகின்றனர்.
News February 1, 2026
அனைத்து மகளிருக்கும்.. அரசு மகிழ்ச்சியான அறிவிப்பு

பெண் கல்வியை ஊக்குவிக்க அனைத்து மாவட்டங்களிலும் தலா ஒரு பெண்கள் விடுதி அமைக்கப்படும் என நிர்மலா சீதாராமன் மகிழ்ச்சிகரமான அறிவிப்பை மத்திய பட்ஜெட்டில் அறிவித்துள்ளார். அதேபோல், பெண்களை தொழில் முனைவோராக மாற்றும் நோக்கில் ‘SheMart’ என்ற புதிய திட்டம் கொண்டுவரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடைகளில் சுய உதவி குழுக்கள் பயன்படும் வகையில், அவர்களது உற்பத்தி பொருள்களை விற்கலாம்.
News February 1, 2026
தேர்தலும்.. FM நிர்மலா சீதாராமனின் புடவையும்!

மத்திய பட்ஜெட் தாக்கல் செய்து வரும் FM நிர்மலா சீதாராமன், தமிழ்நாட்டின் பாரம்பரியத்தை எடுத்துரைக்க காஞ்சிபுரம் பட்டு புடவையை உடுத்தியுள்ளார். கடந்த ஆண்டு அவர், பிஹாரின் மதுபானி புடவையை உடுத்தி இருந்தார். அவரின் புடவைகளுக்கும், தேர்தலுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதாகவே கூறப்படுகிறது. 2025-ல் பிஹார் சட்டமன்ற தேர்தல் நடந்த நிலையில், இந்த ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.


