News March 24, 2026

தமிழகத்தில் ₹178 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்

image

TN முழுவதும் நடந்த சோதனையில் இதுவரை ₹34.64 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யபட்டுள்ளதாக CEC அர்ச்சனா பட்நாயக் கூறியுள்ளார். ₹79 லட்சம் மதிப்பிலான மதுபானம், ₹6.7 கோடி பெறுமானம் உள்ள போதைப் பொருள்கள், ₹112 கோடி மதிப்பிலான தங்கம் & வெள்ளி உலோகங்கள், ₹24.2 கோடி மதிப்பிலான இலவச பொருள்களோடு ரொக்கத்தையும் சேர்த்தால் ஒட்டுமொத்த மதிப்பு ₹178.7 கோடியாகும். தேர்தல் விதிகளை மீறியதாக 544 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

Similar News

News April 3, 2026

CM ஆக EPS-ன் முதல் கையெழுத்து: SP வேலுமணி

image

மக்களின் கஷ்டங்களை அறிந்தே அனைத்து குடும்பத்திற்கும் ₹10,000 வழங்கப்படும் என அதிமுக வாக்குறுதி அளித்திருப்பதாக SP வேலுமணி தெரிவித்துள்ளார். தேர்தலில் அதிமுக வென்று ஆட்சியமைத்தால் முதல்வராக பொறுப்பேற்கும் EPS, அனைத்து குடும்பத்தின் வங்கிக் கணக்கிலும் தலா ₹10,000 என்ற கோப்பில் தான் முதலில் கையெழுத்திடுவார் என அவர் கூறியுள்ளார். இது அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

News April 3, 2026

அமித்ஷா சொல்லி கட்சி ஆரம்பித்த விஜய்: அப்பாவு

image

விஜய்யை பின்தொடர்வது சினிமா கூட்டம் என்று அப்பாவு விமர்சித்துள்ளார். அக்கூட்டமானது வடிவேலு, விஜயகாந்த் போன்ற நடிகர்களுக்கு கூடும் கூட்டம் என்றும், அது வாக்குகளாக மாறாது எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், அமித்ஷாவின் தூண்டுதலின் பெயரில்தான் விஜய் கட்சி ஆரம்பித்ததாகவும், தவெகவுக்கு போடும் ஒரு ஓட்டு என்பது பாஜகவுக்கு போடும் இரட்டை ஓட்டுக்கு சமம் என்று அவர் தெரிவித்துள்ளார். <<-se>>#TNElection2026<<>>

News April 3, 2026

BREAKING: இரவில் விஜய்க்கு அதிர்ச்சி

image

புதுச்சேரியில் தவெக வேட்பாளர்களை ஆதரித்து ஏப்.5-ல் பிரசாரம் செய்ய விஜய் திட்டமிட்டிருந்தார். இதற்காக ரோடு ஷோ நடத்தவும் & 23 இடங்களில் பரப்புரை மேற்கொள்ளவும் போலீசிடம் அனுமதி கேட்கப்பட்டது. ஆனால், ஒரு நாள் முன்னதாக (ஏப்.4-ல்) வில்லியனூர் சந்திப்பு உள்ளிட்ட 4 பகுதிகளில் மட்டுமே விஜய் பிரசாரம் செய்ய அனுமதி தரப்பட்டுள்ளது. அத்துடன் ரோடு ஷோவுக்கு அனுமதி மறுத்திருப்பதால் விஜய் அதிர்ச்சியில் உள்ளாராம்.

error: Content is protected !!