News December 13, 2025

தமிழகத்தில் வேகமெடுக்கும் H3N2 இன்ஃபுளூயன்சா

image

H3N2 இன்ஃபுளூயன்சா காய்ச்சல், பாக்., இங்கிலாந்தில் அதிகமாக பரவுகிறது. அதேநேரம், இந்தியாவிலும் இதன் பரவல் தொடங்கியுள்ளதாக ICMR தெரிவித்துள்ளது. குளிர், காற்றுமாசு, கோவிட் தொற்றுக்கு பிறகு ஏற்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி குறைவு போன்ற காரணங்களால் தமிழகம், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களிலும் இந்த வகை இன்ஃபுளூயன்சா பரவுவது அதிகரித்துள்ளது. எனவே, தொடர் இருமல், காய்ச்சல் இருந்தால் உடனே டாக்டரை அணுகுங்கள்.

Similar News

News March 2, 2026

பாகிஸ்தான் வீரர்களுக்கு தலா ₹16 லட்சம் அபராதம்

image

டி20 உலகக் கோப்பை அரையிறுதிக்கு தகுதிபெறாததால் பாக்., மீது அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் கடும் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக இந்தியாவுக்கு எதிரான போட்டியில் தோற்றதால், ஒவ்வொரு வீரருக்கும் தலா ₹16 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சூப்பர் 8 சுற்றை வெற்றியுடன் முடித்தாலும் நெட் ரன்ரேட் காரணமாக பாக்., அரையிறுதிக்கு செல்லவில்லை.

News March 2, 2026

விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பேச வேண்டாம்: CTR

image

விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு தொடர்பாக SM-ல் அதிகம் விவாதிக்கப்பட்டு வருகிறது. இதற்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் உள்பட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தவெகவின் CTR நிர்மல்குமாரிடமும் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பாக யாரும் பொது வெளியில் பேச வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News March 2, 2026

BREAKING: பள்ளிகள் விடுமுறை.. தமிழக அரசு கொடுத்த அப்டேட்

image

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிப்பது தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஸ் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தேர்தல் வருவதால் அனைத்து வகுப்புகளுக்கும் முழு ஆண்டு தேர்வுகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஏப்ரல் 2-ம் வாரத்திற்குள் அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வை முடித்துவிட்டு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

error: Content is protected !!