News March 13, 2026
தமிழகத்தில் தினமும் ஒரு நிர்பயா: இன்பதுரை MP

மணிப்பூரைப் போல தமிழகத்திற்கும் மத்திய அரசு நாடாளுமன்ற குழுவை அனுப்பி பெண்கள் பாதுகாப்பு பற்றி ஆய்வு செய்ய வேண்டும் என இன்பதுரை MP வலியுறுத்தியுள்ளார். ராஜ்ய சபாவில் பேசிய அவர், கடந்த 10 நாள்களில் மட்டும் 2½ வயது குழந்தை, 2 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக வேதனை தெரிவித்தார். மேலும், தினம் தினம் ஒரு நிர்பயா வழக்கை தமிழகம் சந்தித்து கொண்டிருப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
Similar News
News April 9, 2026
அரியலூர் மக்களே வீட்டில் வோல்டேஜ் பிரச்சனையா?

அரியலூர் மக்களே, வோல்டேஜ் பிரச்சனையா? EB ஆபிஸ் எங்கு இருக்கிறது என்று தேடி அலைய வேண்டாம். வீட்டில் இருந்தே WHATSAPP மூலம் 94458 50811, 9443111912 இந்த நம்பரில் புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 94987 94987 இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம். அதிக பயனுள்ள இந்த தகவலை தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க.
News April 9, 2026
முன்னாள் மத்திய அமைச்சர் காலமானார்

காங்கிரஸ் மூத்த தலைவர் அபு ஹாசிம் கான் சவுத்ரி(89) உடல் நலக்குறைவால் காலமானார். மேற்கு வங்கத்தை சேர்ந்த இவர் 3 முறை MP ஆகவும், 2012 முதல் 2014 வரை சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சராகவும் பணியாற்றினார். இந்நிலையில் அபு ஹாசிம் கான் சவுத்ரி மதச்சார்பின்மை, சமூகநீதி போன்றவற்றை உயர்த்திப் பிடித்தவர் என்று காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இரங்கல் தெரிவித்துள்ளார்.
News April 9, 2026
மத்திய அரசிடம் வீரத்தை காட்டுங்க EPS: அன்பில்

EPS ஒருமுறையாவது நீட் வேண்டாம் என்றோ, மும்மொழி கொள்கையை திணிக்காதீர்கள் என்றோ PM மோடியிடம் வலியுறுத்தி இருக்கிறாரா என அன்பில் மகேஷ் கேள்வி எழுப்பியுள்ளார். CM ஸ்டாலின் பற்றி விமர்சிக்கும் EPS-க்கு பதிலடி கொடுத்த அவர், அண்ணா பெயரில் கட்சி வைத்துகொண்டு, இருமொழி கொள்கையை காக்க EPS-ஆல் முடிந்ததா எனவும் கேட்டார். மத்திய அரசிடம் வீரத்தை காட்டாமல் CM மீது மலிவான விமர்சனத்தை கொட்டுவதாகவும் சாடியுள்ளார்.


