News January 22, 2026

தமிழகத்தில் சிக்குன்குனியா பரவல் அதிகரிப்பு

image

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சிக்குன்குனியா பரவல் அதிகரித்துள்ளது. இதனால், மாநிலம் முழுவதும் கண்காணிப்பை தீவிரப்படுத்த ஹாஸ்பிடல்களுக்கு பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. காய்ச்சல், இருமல், உடல்வலி உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள ஹாஸ்பிடலுக்கு செல்லுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொசு உற்பத்தியை தடுக்க வீடுகளில் நீர் தேங்காமல் தடுப்பது அவசியம்.

Similar News

News January 25, 2026

வசூல் மழையில் ‘மங்காத்தா’ ரீ-ரிலீஸ்

image

ரீ-ரிலீசாகியுள்ள அஜித்தின் மங்காத்தாவை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 400 தியேட்டர்களில் ரீ-ரிலீசான இப்படம் முதல் நாளில் சுமார் ₹6 முதல் ₹8 கோடியும், இரண்டாம் நாளில் ₹8 முதல் ₹10 கோடியும் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இன்றும், நாளையும் விடுமுறை என்பதால் வசூல் அதிகரிக்கும் என்றும், ரீ-ரிலீசில் கில்லியின் ₹30 கோடி வசூலை முறியடிக்கும் எனவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

News January 25, 2026

விசிகவில் 20 பேர் மட்டுமே உள்ளனர்: ஆதவ் அர்ஜுனா

image

21 கட்சிகளுடன் கூட்டணி வைத்தும் விஜய்யை எதிர்க்க திமுக அஞ்சுவதாக ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். தவெக செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய அவர், பெரியார், அம்பேத்கர் கொள்கையை பேசும் திமுக, இருவரது சிலைகளை அண்ணா அறிவாலயத்தில் ஏன் வைக்கவில்லை என கேள்வி எழுப்பினார். இது குறித்து திருமாவளவன் பேச தயங்குவதாகவும், விசிகவில் தற்போது 20 பேர் மட்டுமே உள்ளனர்; மற்றவர்கள் திமுகவில் உள்ளனர் என சாடினார்.

News January 25, 2026

தவெக ஆட்சி உறுதி: முடிவை அறிவித்தார் விஜய்

image

எத்தனை பேர் சேர்ந்து நம்மை எதிர்க்க வந்தாலும், தனியாக வரும் நம்மை தமிழக மக்கள் தேர்வு செய்யத் தயாராகிவிட்டதாக விஜய் தெரிவித்துள்ளார். தவெக செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய அவர், விசில் சின்னத்தை ஒவ்வொரு வீட்டிலும் கொண்டு சென்று சேர்க்க வேண்டும் எனவும் தவெக ஆட்சி அமைவது உறுதி என்றும் கூறினார். இதன் மூலம் தவெக தனித்து களம் காணத் தயாராகி விட்டதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

error: Content is protected !!