News January 10, 2026
தமிழகத்தில் கோர விபத்து.. அடுத்தடுத்து பலி (PHOTO)

நேற்று நள்ளிரவில் நடந்த கோரச் சம்பவம் ஒன்று தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சேலம் நங்கவள்ளி டூ ஜலகண்டாபுரம் பிரதான சாலையில் சென்று கொண்டிருந்த சரக்கு ஆட்டோ மீது பைக் ஒன்று நேருக்கு நேர் மோதியுள்ளது. இந்த கோர விபத்தில் தலை நசுங்கி எடப்பாடியை சேர்ந்த 3 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். மேலும் ஒருவர் தீவிர சிகிச்சையில் உள்ளார். எதனால் விபத்து நடந்தது என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News January 31, 2026
தங்கம் விலை மேலும் குறைகிறது

தங்கம் விலை ஏறிய வேகத்தில் <<19009659>>சரசரவென குறைந்து வருவதால்<<>> தேசிய அளவில் முக்கிய விவாதமாக மாறியுள்ளது. X தளத்தில் #GoldPrice ஹேஷ்டேக் முதலிடத்தில் டிரெண்டாகி வருகிறது. இந்திய சந்தையில் 2 நாள்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ₹15,200 குறைந்துள்ளது. டாலர் பணவீக்கத்தை கட்டுப்படுத்த அமெரிக்க எடுத்துள்ள முயற்சிகளால் வரும் நாள்களில் தங்கம் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
News January 31, 2026
சிட்டிங் தொகுதியை விட்டுக் கொடுக்கிறாரா வானதி.. ஏன்?

கடந்த தேர்தலில் தனக்கு வெற்றியை பரிசளித்த கோவை தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசன் போட்டியிடமாட்டார் என தகவல் கசிந்துள்ளது. சென்ற முறை கோவை தெற்கில் தனக்கு டஃப் ஃபைட் கொடுத்த கமலும், திமுகவும் தற்போது ஒரே அணியில் நிற்பதால், இம்முறை அங்கு வெல்லமுடியுமா என்ற சந்தேகம் வானதிக்கு வந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், இம்முறை கோவை வடக்கு தொகுதியை அவர் குறிவைத்து வேலைகளை தொடங்கியிருப்பதாக பேசப்படுகிறது.
News January 31, 2026
சிகரெட்டை நிறுத்தணுமா? நச்சுனு ‘3’ டிப்ஸ்

புகை பிடிக்கும் பழக்கத்தை கைவிட முயற்சி செய்து கொண்டிருப்பவர்கள் இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க ➤நிக்கோட்டின் சாக்லெட்/சூயிங்கம் போன்றவற்றை முயற்சிக்கலாம் ➤டென்ஷன் காரணமாக புகைப்பிடிப்பவர் என்றால், அதற்கு பதிலாக யோகா, தியானம், மூச்சு பயிற்சியில் கவனம் செலுத்தலாம் ➤ஒரு சிகரெட் பிடித்தால், மேலும் இன்னொரு சிகரெட்டும் பிடிக்கத் தோன்றும். அதனால் அந்த எண்ணத்தையே கட்டுப்படுத்துங்க. SHARE.


