News November 6, 2025

தமிழகத்தில் உருவான சமூக நல்லிணக்க கூட்டணி

image

வேல்முருகன், தனியரசு, தமிமுன் அன்சாரி இணைந்து சமூக நல்லிணக்க கூட்டணியை உருவாக்கியுள்ளனர். இதுதொடர்பாக மூவரும் நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது தமிழ்நாட்டில் வாழும் சாதி- சமூகங்களுக்கு மத்தியில் நல்லிணக்கத்தை வளர்ப்பது தொடர்பாகவும், அவர்களுக்கு மத்தியில் தமிழர் ஒற்றுமை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது குறித்தும் விவாதித்துள்ளனர். இதில், பல சமூக தலைவர்களை இணைக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

Similar News

News January 25, 2026

திருவாரூர்: VOTER ID வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் https://voters.eci.gov.in/login என்ற இணையதளம் சென்று உங்க VOTER ID எண்ணை உள்ளீடு செய்யவும். பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள். இத்தகவலை SHARE பண்ணுங்க.

News January 25, 2026

₹1,200 பென்ஷன் அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்

image

சிறப்பு ஓய்வூதியம் பெற்றுவரும் சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கிராம ஊராட்சி செயலாளர்கள் உயிரிழந்தால், குடும்ப ஓய்வூதியமாக ₹1,200 வழங்கப்படும் என CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். குறு அங்கன்வாடி பணியாளர்கள், வன களப்பணியாளர்கள் உள்ளிட்ட இதர சிறப்பு காலமுறை ஊதியப் பணியாளர்கள் உயிரிழந்தால் குடும்ப ஓய்வூதியமாக ₹1,100 வழங்கப்படும் எனவும் CM பேரவையில் அறிவித்தார்.

News January 25, 2026

ஆட்சியில் பங்கு: ஸ்ட்ரிக்ட் ஆக சொன்ன ராகுல்

image

ஆட்சியில் பங்கு தர வேண்டும் எனப் பேசி, திமுக-காங்கிரஸ் கூட்டணி சர்ச்சையில் மையப்புள்ளியாக இருந்தவர் மாணிக்கம் தாகூர். இந்நிலையில், தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு தொடர்பான கருத்துகளை பொதுவெளியில் பேசக்கூடாது என ராகுல் தெரிவித்ததாக மாணிக்கம் தாகூர் MP கூறியுள்ளார். மேலும், இதுதொடர்பாக தனது கருத்துகளை ராகுலிடம் தெளிவாக விளக்கிவிட்டதாகவும் அவர் பேசியுள்ளார்.

error: Content is protected !!