News January 24, 2026
தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று கடலோரம் மற்றும் ஒருசில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர், தி.மலை, விழுப்புரம், கடலூர் ஆகிய 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று எச்சரித்துள்ளது. மேலும், குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40-60 கி.மீ. வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என மீனவர்களையும் எச்சரித்துள்ளது.
Similar News
News February 3, 2026
கூட்டணிகளை அடிமை போல நடத்தும் திமுக: செல்லூர் ராஜு

அதிமுகவுக்கு சாதகமாக வரும் கருத்துக் கணிப்புகளை பார்த்து திமுக கலக்கமடைந்துள்ளது என செல்லூர் ராஜு கூறியுள்ளார். திமுக தனது கூட்டணிக் கட்சிகளை அடிமைபோல் வைத்துள்ளது என விமர்சித்த அவர், அதனால்தான் அவர்கள் மக்கள் பிரச்னைகளைப் பற்றி வாய் திறக்காமல் உள்ளதாகவும் பேசியுள்ளார். மேலும், பாஜக கூட்டணியில் திமுக இருந்தபோது அவர்கள் சொன்னதையெல்லாம் திமுக நிறைவேற்றினார்கள் எனவும் சுட்டிகாட்டியுள்ளார்.

தேர்தல் தேதி அறிவித்தாலும் மாநாடு உண்டு: KN நேரு

தமிழக தேர்தல் தேதி பிப்ரவரி இறுதி (அ) மார்ச் முதல் வாரத்தில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே, மார்ச்.8-ல் திருச்சியில் திமுக மாநில மாநாடு நடைபெறவுள்ளது. இந்நிலையில், தேர்தல் தேதி அறிவிப்பு வந்தாலும், திட்டமிட்டபடி மாநாடு நடைபெறும் என அமைச்சர் KN நேரு தெரிவித்துள்ளார். மாநாடு செலவுகள் குறித்தும் ECI-யிடம் சமர்ப்பிக்கப்படும் என்றார்.