News January 15, 2026
தமிழகத்தின் புதிய ஜல்லிக்கட்டு மைதானம்!

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள சூரியூரில், ₹3 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஜல்லிக்கட்டு மைதானத்தை DCM உதயநிதி இன்று திறந்து வைத்தார். அவர் பேசுகையில், திருச்சிக்கு மலைக்கோட்டை, காவிரி ஆறு எப்படி அடையாளமோ, அதே போன்று சூரியூர் ஜல்லிக்கட்டும் ஒரு அடையாளம் என்றவர், இதுவரை மந்தையில், குளத்தில் நடந்த சூரியூர் ஜல்லிக்கட்டு நாளை ஜன.16 முதல் இந்த நிரந்தர அரங்கில் நடைபெறும் என அறிவித்தார்.
Similar News
News March 29, 2026
புதுக்கோட்டை: சாலை விபத்தில் 2 பேர் பலி – சோகம்

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜெயபாரதி(57). அரசு பள்ளி ஆசிரியரான இவர், நேற்று டூவீலரில் பொன்னமராவதி – திருப்பத்தூர் சாலையில் சென்றபோது எதிரே டூவீலரில் வந்த ஒழுகமங்கலம் நிதீஷ்குமார்(20) என்பவரது வாகனமும் மோதிக்கொண்ட விபத்தில் ஜெயபாரதி, நிதீஷ்குமார் 2 பேரும் அதே இடத்தில் உயிரிழந்தனர். இதுகுறித்து போலீஸார் 2 பேரின் உடல்களை புதுகை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரிக்கின்றனர்.

கரூரில் 3 புதியவர்களுக்கு வாப்பு கொடுத்த திமுக!

கரூர் மாவட்டத்தின் நான்கு தொகுதிகளுக்கான திமுக வேட்பாளர்களை அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதில் அரவக்குறிச்சி தொகுதியில் தற்போதுள்ள எம்.எல்.ஏ இளங்கோ மீண்டும் போட்டியிடுகிறார். மற்றபடி, கரூர் தொகுதியில் தியாகராஜன், கிருஷ்ணராயபுரம் தொகுதியில் சி.கே.ராஜா, மற்றும் குளித்தலை தொகுதியில் சந்திரன் என மூன்று புதிய வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.