News April 12, 2024
தபால் வாக்கு செலுத்தும் மையத்தில் ஆய்வு

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தின் பின்புறம் உள்ள கூட்ட அரங்கில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் தபால் வாக்கு செலுத்துவதற்காக பிரத்தியேகமான தபால் வாக்கு செலுத்தும் சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் கற்பகம் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Similar News
News November 21, 2025
பெரம்பலூர்: பஸ் மீது மோதி இளைஞர் பலி!

பெரம்பலூர் மாவட்டம், பாடலூர் நெடுஞ்சாலை ஆஞ்சநேயர் கோயில் அருகே, நேற்று (நவ.20) அன்னமங்கலத்தை சேர்ந்த திலீப் ராஜ் (22) என்பவர் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக பஸ் மீது மோதியது. தூக்கி விசப்பட்டத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக திலீப் ராஜ் இறந்தார். இது குறித்து பாடலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
News November 21, 2025
பெரம்பலுர்: அரசு அலுவலகம் செல்ல வேண்டாம் – இது போதும்!

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் போன்றவற்றை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம்.
1. பான்கார்டு: NSDL
2. வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in
3. ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/
4. பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink
5. இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.
News November 21, 2025
பெரம்பலூர்: மாவட்ட ஆட்சியர் முக்கிய தகவல்

பெரம்பலூர் மாவட்டத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகளின் மூலம், இதுவரை 2.36 லட்சம் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தெரிவித்தார். பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகம், பள்ளி உள்ளிட்ட மையங்களில், வாக்காளர்களால் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள், தேர்தல் ஆணையத்தின் பிரத்யேக செயலியில் அலுவலர்கள் பதிவேற்றம் என தெரிவித்தார்.


