News August 29, 2025
தபால் தலை சேகரிப்பு வினாடி-வினா போட்டி!

தபால்துறை சார்பில் தபால் தலை சேகரிப்பு வினாடி-வினா போட்டிக்கு பள்ளி மாணவர்கள் கலந்துக் கொள்ள விண்ணப்பிக்கலாம். https://tamilnadupost.cept.gov.in/ இணையத்தில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்திச் செய்து வரும் செப்.01-ம் தேதிக்குள் போஸ்ட் மாஸ்டர் ஜெனரல், மேற்கு மண்டலம், கோவை- 641030 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என சேலம் கிழக்கு கோட்ட அஞ்சலக முதுநிலை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 1, 2025
சேலத்தில் வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.1,687 ஆக நிர்ணயம்!

செப்டம்பர் மாதத்திற்கான காஸ் சிலிண்டர் விலை பட்டியலை இன்று (செப்.01) எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சேலத்தில் 19 கிலோ எடைக் கொண்ட வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.51 குறைந்து ரூ.1,687 ஆக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனினும், 5-வது மாதமாக வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை மாற்றமின்றி ரூ.886.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
News September 1, 2025
சேலத்தில் ஆட்சிமொழி பயிலரங்கம்

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், 2025-26ஆம் ஆண்டுக்கான ஆட்சிமொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் வரும் அக்டோபர் மாதம் 10 மற்றும் 11 தேதிகளில் நடைபெற உள்ளது. அரசுத் துறை, வாரியம், கழகம் மற்றும் தன்னாட்சி நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலர், கண்காணிப்பாளர், உதவியாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் ஆகியோர் இந்தப் பயிலரங்கில் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும் என ஆட்சியர் தெரிவித்த்துள்ளார்.
News September 1, 2025
சேலம் ரயில் பயணிகளின் கவனத்திற்கு!

இணைப்பு ரயில் வருகையின் தாமதம் காரணமாக சேலம் வழியாகச் செல்லும் கோவை-தன்பாத் சிறப்பு ரயில் (03680) நாளை (செப்.02) காலை 07.50 மணிக்கு கோவை ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய நிலையில் சுமார் 08.25 மணி நேரம் தாமதமாக மாலை 04.15 மணிக்கு புறப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த சிறப்பு ரயில் திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும்.