News August 17, 2025

தபால் தலை சேகரிப்பு வினாடி- வினா போட்டி!

image

“6 முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணாக்கர்களுக்கு தபால் தலை சேகரிப்பு வினாடி-வினா போட்டி நடக்கவுள்ளது. வெற்றி பெறும் மாணவர்கள் ரூ.6,000 பரிசு பெறலாம். விண்ணப்பப் படிவத்தை https://tamilnadupost.cept.gov.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். விவரங்களுக்கு 0427-2253050, 2266370 எண்களை அழைக்கலாம். இப்போட்டி செப்.20-ல் நடக்க உள்ளது” என சேலம் கிழக்கு கோட்ட அஞ்சல் முதுநிலை கண்காணிப்பாளர் தகவல்!

Similar News

News November 13, 2025

சேலம் வழியாக செல்லும் ரயிலில் கூடுதல் பெட்டிகள்!

image

சேலம் வழியாக இயக்கப்படும் கோவை-கேஎஸ்ஆர் பெங்களூரு-கோவை உதய் எக்ஸ்பிரஸ் டபுள் டக்கர் ரயிலில் [22666/22665] கூடுதலாக ஒரு ஏசி LHB பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை வரும் ஜனவரி 20- ஆம் தேதி முதல் மே 19- ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல், கோடை விடுமுறை உள்ளிட்டவைகளை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

News November 12, 2025

சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (நவ.12) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.

News November 12, 2025

சேலம்: இளநிலை உதவியாளர்களுக்கு பதிவு உயர்வு!

image

சேலம் ஊரக வளர்ச்சி அழகில் உதவியாளர் நிலையில் இருந்த ஊர் நல அலுவலர் அருண் ஏற்காடு ஊராட்சி ஒன்றியத்தில் மகாத்மா காந்தி வீடு கட்டும் திட்டத்திற்கும், பிரியதர்ஷினி காடையாம்பட்டி ஒன்றியத்தில் தணிக்கை பிரிவுக்கும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இதற்கான உத்தரவை சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி பிறப்பித்தார்.

error: Content is protected !!