News September 14, 2024

தபால் அலுவலகங்களில் நாளை ஆதார் சேவை மையம்

image

தூத்துக்குடி தலைமை அஞ்சலகத்தில் ஆதார் பதிவு மற்றும் திருத்த சேவைகள் நாளை 15ஆம் தேதி காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை செயல்படும். அரசு அறிவுறுத்தலின்படி 10 ஆண்டுகள் நிறைவுற்ற ஆதார் அட்டையினை புதுப்பித்துக் கொள்ளவும், பணிக்கு செல்வோர் மற்றும் பள்ளிக் குழந்தைகளின் ஆதார் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளவும், பொதுமக்கள் இந்த சிறப்பு ஏற்பாட்டை பயன்படுத்தி கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டது.

Similar News

News August 14, 2025

வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஆட்சியர் அலுவலகம்

image

நாட்டின் 79வது சுதந்திர தின விழா நாளை மறுநாள் (ஆக. 15) கொண்டாடப்பட உள்ளது. இதனை ஒட்டி தேசமே விழாக்கோலம் பூண்டு வருகிறது. அந்த வகையில் கோரம்பள்ளத்தில் உள்ள தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தேசிய ஒருமைப்பாட்டை விளக்கும் வகையில் சிகப்பு வெள்ளை பச்சை நிறத்தில் வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் வகையில் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

News August 13, 2025

தூத்துக்குடி: இ.ஸ்கூட்டருக்கு ரூ.20,000 மானியம்.. APPLY!

image

தூத்துக்குடி மக்களே தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியம் சார்பாக தற்காலிக பணியாளர்களுக்கு பொருளாதார மேம்படுத்தும் நோக்கத்தோடு புதிதாக இ.ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம் வழங்குகிறது. <>இந்த இணையதளத்தில்<<>> Subsidy for eScooter என்ற ஆப்ஷனை கிளிக் செய்து நீங்கள் உறுப்பினராக பதிவு செய்த பின்னர் அதில் கேட்கப்படும் ஆவணங்களை பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

News August 13, 2025

கோவில்பட்டி: 2வது முறையாக லஞ்சம் புகாரில் VAO

image

கோவில்பட்டி அருகே ஈராச்சி VAO அலுவலகத்தில் மாரீஸ்வரி என்பவர் தனது தாத்தா, பாட்டி இறப்பினை பதிவு செய்து சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள்ளார். VAO செந்தில்குமார் ரூ.3,500 லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். செந்தில்குமார் 2012ம் ஆண்டில் கோவில்பட்டி, கிராம நிர்வாக அலுவலராக இருந்த போது பட்டா மாற்றம் தொடர்பாக ரூ.3,000 லஞ்சம் வாங்கியதாக தகவல்.

error: Content is protected !!