News January 16, 2026
தன்பாத்-கோவை வாராந்திர ரயில்கள் திடீர் ரத்து

ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து வாரந்தோறும் சனிக்கிழமை கோவைக்கு இயக்கப்பட்டு வந்த தன்பாத்-கோவை வாராந்திர எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.இந்த ரயில் சேலம் வழியாக இயக்கப்பட்டு வந்தது. நாளை முதல் மறு அறிவிப்பு வரும் வரை இந்த ரத்து அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. .
Similar News
News February 13, 2026
கோவை: கேஸ் சிலிண்டர் யூஸ் பண்றீங்களா?

கோவை மக்களே; எதிர்பாராத நேரங்களில் வீட்டின் சமையல் கேஸ் சிலிண்டரில் LPG கசிவு ஏற்பட்டால், 1906 என்ற அவசர உதவி எண்ணுக்கு அழைக்கவும். இது இந்தியன் ஆயில், HP மற்றும் பிபிசிஎல் போன்ற அனைத்து எல்பிஜி நிறுவனங்களுக்கும் பொதுவான அவசர உதவி எண் ஆகும். இந்த எண் 24 மணி நேரமும் கிடைக்கும். மேலும், 1800 233 3555 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். எல்லாரும் தெரிஞ்சுகட்டும், மறக்காம ஷேர் பண்ணுங்க.
News February 13, 2026
கோவையில் போலீஸ் குவிப்பு!

கோவையில் 1998-ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 58 பேர் உயிரிழந்தனர். இத்துயரச் சம்பவத்தின் நினைவு தினம் ஆண்டுதோறும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாளை (பிப்.14) நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெறவுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று (பிப்.13) முதல் கோவை மாநகரம் முழுவதும் சுமார் 2,000 போலீஸார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
News February 13, 2026
கோயம்புத்தூரில் 2 நாள்கள் தடை

கோவையில் வழக்கமாக ட்ரோன்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதிகளுடன் சேர்த்து சிங்காநல்லூர், சின்னியம்பாளையம், நேருநகர், பீளமேடு, லட்சுமி மில்ஸ், இராமநாதபுரம், ரேஸ்கோர்ஸ், காந்திபுரம், சாய்பாபா காலனி, வடவள்ளி (ம) அதன் சுற்றுவட்டார பகுதிகள் தற்காலிகமாக REDZONE ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இன்று (பிப்.13) 9 மணி முதல் (பிப்.15) 9 மணி வரை ஆளில்லா விமானம் (ம) ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.


