News July 7, 2024
தனுஷை நான் செதுக்கவில்லை: செல்வராகவன்

தனுஷ் இயக்கி, நடிக்கும் ‘ராயன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. அதில் பேசிய இயக்குநர் செல்வராகவன், தனுஷை தான் செதுக்கவில்லை என்றும், ஒரு கல்லை மட்டுமே வைத்து விட்டு சென்றதாகவும், அவரே தன்னைத்தானே செதுக்கி கொண்டதாகவும் கூறினார். மேலும், அவர் இன்னும் நிறைய படங்களை இயக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். ‘ராயன்’ திரைப்படம் வரும் 26ஆம் தேதி வெளியாக உள்ளது.
Similar News
News September 23, 2025
GST 2.0: விலையை குறைக்கலையா? புகார் செய்ங்க

GST 2.0 அமலான போதிலும், சில இ-காமர்ஸ் நிறுவனங்கள் இன்னும் விலையை குறைக்கவில்லை என மத்திய அரசிடம் புகார்கள் குவிந்து வருகின்றன. நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், வரும் 30-ம் தேதி அறிக்கை கிடைத்த உடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது. நீங்களும் இதுபோன்ற பிரச்னைகளை எதிர்கொண்டால் டோல் ஃபிரீ எண்ணான 1915 (அ) www.consumerhelpline.gov.in என்ற தளத்தில் புகார் அளிக்கலாம்.
News September 23, 2025
சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்த உதவும் ஜுஸ்கள்

நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு பல்வேறு உணவு கட்டுபாடுகள் உள்ளன. இருப்பினும் சில ஜூஸ் நன்மை அளிக்கின்றன. அதுபோன்று வீட்டில் எளிதாக செய்யக்கூடிய ஜூஸ் என்னவென்று மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. மேலும், இதுபோன்று உங்களுக்கு தெரிந்த ஜூஸ் பெயரை கமெண்ட்ல சொல்லுங்க.
News September 23, 2025
BREAKING: பிரபல அம்பயர் ‘டிக்கி பேர்ட்’ காலமானார்

கிரிக்கெட் விளையாட்டில் உலகம் முழுவதும் ரசிகர்களால் மறக்க முடியாத நடுவர் இங்கிலாந்தை சேர்ந்த டிக்கி பேர்ட் (92 வயது). வயது மூப்பு காரணமாக அவர் காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது. லெஜெண்ட அம்பயரான அவரது மறைவுக்கு வீரர்களும் ரசிகர்களும் அஞ்சலி தெரிவித்து வருகின்றனர்.