News January 20, 2026

தனுஷுக்கு ₹180 கோடி சம்பளமா?

image

தனுஷின் சம்பளம் தொடர்பாக கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, தயாரிப்பாளர் ஐசரி கணேஷுடன் தனுஷ் மூன்று படத்திற்கு ஒப்பந்தம் போட்டுள்ளாராம். ஒரு படத்திற்கு ₹60 கோடி வீதம், 3 படத்திற்கு சேர்த்து ₹180 கோடியை தனுஷ் சம்பளமாக பெற இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அதிக சம்பளம் வாங்குவோரின் பட்டியலில் தனுஷ் வேகமாக முன்னேறி வருவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Similar News

News February 17, 2026

தெறி ரீ-ரிலீஸ் தேதி.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

image

விஜய்யின் ‘தெறி’ படம் பிப்.27-ல் ரீ-ரிலீஸ் செய்யப்படும் என தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஏற்கெனவே சில புது படங்களின் ரிலீஸால் 2 முறை ரீ-ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது. சென்சார் பிரச்னையால் ‘ஜன நாயகன்’ பட ரிலீஸ் தள்ளிப்போய்க் கொண்டே இருக்கும் நிலையில், இந்த ரீ-ரிலீஸ் அறிவிப்பு விஜய் ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது. இப்படத்தின் பெஸ்ட் தியேட்டர் மொமண்ட் எது?

News February 17, 2026

BREAKING: திமுகவுடன் கூட்டணி.. விஜய்க்கு அதிர்ச்சி

image

திமுக கூட்டணியில்தான் காங்., இருப்பதாக <<19169713>>கே.சி.வேணுகோபால்<<>> உறுதிப்படுத்தியுள்ளார். திமுகவுடன் ஏற்பட்ட சலசலப்பால் காங்., தவெக பக்கம் செல்ல வாய்ப்புள்ளதாக பேச்சு அடிப்பட்டது. இதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள கே.சி.வேணுகோபால், கட்சியினர் தேவையற்ற கருத்துகளை கூறுவதால், இணக்கமற்ற சூழல் ஏற்பட்டு காங்கிரசின் நலன் பாதிக்கப்படும். எனவே, இனி யாரும் திமுகவுக்கு எதிராக பேசக்கூடாது என அறிவுறுத்தியுள்ளார்.

News February 17, 2026

3.71 லட்சம் மகளிருக்கு.. தமிழக அரசு அசத்தல் செய்தி

image

பெண்கள் பெயரில் பதிவு செய்யப்படும் ₹10 லட்சம் வரை மதிப்பிலான வீடுகள், மனைகள் & விவசாய நிலங்கள் உள்ளிட்ட அசையா சொத்துக்களுக்கு கடந்த ஏப்ரல் 2025 முதல் பதிவு கட்டணம் 1 % குறைக்கப்பட்டது. இந்நடவடிக்கையின் மூலம் 3,71,705 பெண்கள் இதுவரை பயனடைந்துள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இதுதொடர்பான அறிவிப்பு 2025-26 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது.

error: Content is protected !!