News December 28, 2025
தனியா? அணியா? விஜய் சூசகம்

தேர்தல் கூட்டணி குறித்து ‘ஜனநாயகன்’ விழாவில் தனது நிலைப்பாட்டை விஜய் சூசகமாக கூறியுள்ளார். எப்போதுமே தனியாக இருந்ததில்லை என்றும், 33 ஆண்டுகளாக மக்களுடன் இருப்பதால் அதுவும் ஒரு மிகப்பெரிய அணிதானே எனவும் பேசினார். இதில் சஸ்பென்ஸ் வைத்தால் தான் கிக் இருக்கும் எனக் கூறிய விஜய், இதை கைதட்டலுக்காக பேசவில்லை மனதில் இருந்து மக்களுக்காக பேசுகிறேன் என தெரிவித்தார். கூட்டணியை தான் அணி என்று கூறுகிறாரோ?
Similar News
News January 3, 2026
BREAKING: தங்கம் விலை மீண்டும் குறைந்தது

தங்கம் விலை இன்று(ஜன.3) 22 கேரட் கிராமுக்கு ₹60 குறைந்து ₹12,520-க்கும், சவரன் ₹480 குறைந்து ₹1,00,160-க்கும் விற்பனையாகிறது. புத்தாண்டு ஆண்டு சரிவைக் கண்ட தங்கம், நேற்று சவரனுக்கு ₹1,120 உயர்ந்தது. இந்நிலையில், இன்று மீண்டும் சவரனுக்கு ₹480 குறைந்ததால் இன்றைய தினம் நகை வாங்க நினைத்தோர் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
News January 3, 2026
கூட்டணி முடிவை விஜய் அறிவிப்பார்: செங்கோட்டையன்

CM ஸ்டாலின் தொடங்கிவைத்த வைகோவின் ‘சமத்துவ நடைப்பயணத்தை’ காங்கிரஸ் <<18740431>>புறக்கணித்ததால்<<>> திமுகவுக்கு மனக்கசப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் காங்கிரஸ் கட்சி தவெக உடன் கூட்டணி அமைக்கும் என்ற கருத்து மேலும் வலுவடைந்துள்ளது. இதுகுறித்து செங்கோட்டையனிடம் கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், கூட்டணி பற்றி தவெக தலைவர் விஜய்தான் அறிவிப்பார் என அவர் பதிலளித்துள்ளார்.
News January 3, 2026
இனி கல்யாணம் பண்ணாலும் கிரீன் கார்டு கிடைக்காது!

USA-வில் டிரம்ப் நிர்வாகம், குடியேற்ற சட்டங்களை மிக கடுமையாக்கி வரும் நிலையில், இதில் அடுத்த டார்கெட் Marriage Green Card. அமெரிக்கரை திருமணம் செய்தால் கிரீன் கார்டு பெறலாம் என்பதாலேயே, பல திருமணங்கள் நடைபெற்று வந்தன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, அமெரிக்க குடிமகனை திருமணம் செய்து கொண்டாலும், திருமணத்திற்கு பின் சேர்ந்து வாழ்ந்தால் மட்டுமே கிரீன் கார்டு கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.


