News October 27, 2024
தனியார் வேலைவாய்ப்பு முகாமில் உடனடி பணி நியமன ஆணை

மேல்மருவத்தூர் லட்சுமி பங்காரு அடிகளார் கலை அறிவியல் கல்லூரியில் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் தனியார் வேலைவாய்ப்பு முகாம் இன்று (அக்.26) நடைபெற்றது. இதில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், எம்பி செல்வம், எம்எல்ஏ பனையூர் பாபு, கலெக்டர் அருண்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டு பணி நியமன ஆணை வழங்கினர்.
Similar News
News February 1, 2026
செங்கல்பட்டு: Z வேகத்தில் வந்த சிறுநீரகம்!

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆஸ்பத்திரியில் சிறுநீரகம் செயலிழந்த 3 பேர் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு சிறுநீரகங்கள் தேவைப்பட்டதையடுத்து முளைச்சாவு அடைந்த ராமநாதபுரம், கோவை பகுதியை சேர்ந்த 3 பேரின் சிறுநீரகங்கள் ஆம்புலன்ஸ் மூலமாக 24 மணி நேரத்திற்குள் கொண்டு வரப்பட்.டது. 12 வயதுக்கு உட்பட்ட சிறுமி மற்றும் 2 பேருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து சாதனை படைக்கப்பட்டது.
News February 1, 2026
செங்கல்பட்டு தாய்மார்களுக்கு ரூ.11,000

பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா (PMMVY) மூலம் கர்ப்பிணிகள் & பாலூட்டும் தாய்மார்களுக்கு மொத்தம் ரூ.11,000 உதவி வழங்கப்படுகிறது. முதல் குழந்தைக்கு ரூ.5,000 மற்றும் 2-வது பெண் குழந்தை என்றால் ரூ.6,000 இந்த திட்டம் மூலம் வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க அருகிலுள்ள அரசு சுகாதார மையத்தை அணுகலாம். அல்லது <
News February 1, 2026
செங்கல்பட்டு: கர்ப்பமான பிளஸ்-1 மாணவி சாவு

செங்கல்பட்டு அடுத்த மேலமையூர் ஊராட்சியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி செங்கல்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இந்நிலையில், கடந்த 8ம் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. பரிசோதத்தில் அவர் 4 மாதம் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. மேலும், அவருக்கு மஞ்சள் காமாலை நோய் இருந்ததால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.


