News February 12, 2025

தனியார் ரத்த பரிசோதனை மையத்தில் தீ விபத்து

image

கல்பாக்கம், சதுரங்கப்பட்டினம் பஜார் சாலையில் தனியார் ரத்த பரிசோதனை மையம் செயல்படுகிறது. நேற்று (பிப்.11) காலை, ரத்த பரிசோதனை மையத்தின் உட்புற பகுதியிலிருந்து கரும்புகை வெளியேறியது. பின்னர் தீயும் பற்றி எரியத் தொடங்கியது. அப்பகுதியினர் கொடுத்த தகவலின் பேரில், தீயணைப்பு வீரர்கள் வந்து தீ பரவாமல் கட்டுப்படுத்தினர். இதில், ரத்த பரிசோதனை மையச் சாதனங்கள், ‘பிரிஜ், ஏசி’ உள்ளிட்டவை எரிந்து சாம்பலாகின.

Similar News

News April 9, 2026

செங்கை: 9445030725 இந்த நம்பரை SAVE பண்ணிக்கோங்க!

image

செங்கை மக்களே அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவை இனி Whatsapp மூலமாக பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 9445030725 என்ற எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும். பிறகு Book Ambulance-ஐ தேர்வு செய்து send Location என கிளிக் செய்து Location-னை பகிரவும். கட்டுப்பாட்டு மையம் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும். உயிருக்கு போராடும் நேரத்தில், லொகேஷன் தெரியாமல் அலைய வேண்டிய தேவையே இருக்காது. ஷேர்!

News April 9, 2026

மாற்றுத்திறனாளிகளுக்கு வீல் சேர் வசதி!

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகள் சுலபமாக வாக்களிக்க வீல் சேர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாவட்டம் முழுவதும் தேவையான அளவில் வீல் சேர்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் மாற்றுத்திறனாளிகள் எந்த சிரமமும் இன்றி தங்கள் வாக்குரிமையை செலுத்த முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

News April 9, 2026

செங்கை: இனி வங்கியில் வரிசையில் நிற்காதீங்க!

image

செங்கை மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்! 1. SBI – 90226 90226, 2. Canara Bank – 90760 30001, 3. Indian Bank – 87544 24242, 4. IOB – 96777 11234, 5. HDFC – 70700 22222. மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க.

error: Content is protected !!