News March 13, 2025

தனியார் பஸ் மோதி இளம்பெண் பலி

image

கச்சிராயபாளையம் அடுத்த மாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரேமா 27, இவர் ஊராட்சியில் கணக்கெடுக்கும் பணி செய்து வந்தார். நேற்று காலை கச்சிராயபாளையத்தில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி பைக்கில் செல்லும் பொழுது தனியார் பஸ் பைக் மீது மோதியதில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில்,சம்பவ இடத்திலேயே பிரேமா உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றது.

Similar News

News March 13, 2025

SBI வங்கியில் ஓய்வு பெற்றவர்களுக்கு வேலை

image

SBI வங்கியில் ஓய்வு பெற்றவர்களுக்கான 88 தணிக்கையாளர் (Concurrent Auditor) வேலைவாய்ப்பு உள்ளது. வங்கி சேவைகள் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். 1 வருடத்திற்கு ஒப்பந்த முறையில் பணியமர்த்தப்படுவார்கள். அதிகபடியாக 3 ஆண்டுகள் வரை விரிவாக்கம் செய்யப்படும். தகுதி <>அடிப்படையில்<<>> ரூ.45,000 – ரூ.80,000 வரை மாதம் சம்பளம் வழங்கப்படும். 15ஆம் தேதிகள் விண்ணப்பியுங்கள்.

News March 13, 2025

கனமழையால் இடிந்து விழுந்த கூரை வீடு

image

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், ஆலத்தூர் குறுவட்டம் மோகூர் கிராமத்தில் வசிக்கும் பெரியசாமி (வயது சுமார் 70) என்பவரின் வீட்டின் கூரை ஒரு பகுதி சுவர் நேற்று பெய்த கனமழையால் இடிந்து விழுந்தது, இதில் காயமடைந்த பெரியசாமி கள்ளக்குறிச்சி மாவட்ட மருத்துவக் கல்லூரி அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

News March 13, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று இரவு 10:00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே அவசர உதவிக்கு மேற்கொண்ட அதிகாரிகளின் தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம்.

error: Content is protected !!